Pages

Tuesday, March 6, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி (OK OK) – பாடல் விமர்சனம்

“வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு…” இன்னும் ஒரு கொஞ்சக் காலத்துக்கு நம்ம பசங்களின் தேசிய கீதமாக ஒலிக்கப்போகின்றது. இந்தப் பாடல் உள்ளிட்ட ஐந்து அசத்தலான பாடல்களைத் தாங்கி ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ இசை ஆல்பம் வெளிவந்திருக்கின்றது.
“கொஞ்ச நாளைக்கு எல்லா ரேடியோக்களும் போட்டு தேய்க்கப்போற இசைத்தட்டு இது” என ஆடியோ ரிலீஸ்ல நடிகர் கார்த்தி பேசினார். உண்மை தான், நான் கூட நாலைஞ்சு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் புதுசா ஒரு படத்தின் பாடலை கேட்கிறதுக்கு ரேடியோ முன்னாடி தவம் இருப்பன். ஏன்னா, அப்பவெல்லாம் ரேடியோல கேட்டாத்தான் உண்டு. நம்ம கையில பாட்டு வந்து சேர்ரதுக்கு ஒரு வாரம் ஆகும். இப்ப அப்பிடியில்ல, ரேடியோக்கே சிலவேளை என்னைப்போல பசங்க தான் பாட்டு டவுண்லோட் பண்ணிக்குடுக்கிறாங்க.

கொஞ்ச காலத்துக்கு முன்னர் வரை விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்கள் வருசத்துக்கு தலா மூணாவது வந்திச்சு. இந்த லிஸ்ட்ல கமல் படங்களும் இருந்திச்சு. அதுபோல ரஹ்மான் பாடல்களும் அடிக்கடி வந்திச்சு. அதனால ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு பாடலைக் கேட்டாங்க. ரேடியோக்களும் போட்டி போட்டுக்கொண்டு பாடலை ஒளிபரப்பினாங்க. ‘அந்நியன்’ பாடல் தொடர்பா ரெண்டு ரேடியோக்காரங்க கோர்ட்டு, கேஸெண்டெல்லாம் போட்டாங்க.. அந்தளவு போட்டி இருந்திச்சு.

இப்ப அதெல்லாம் மாறிடிச்சு. ரசிகர்கள் - ரோடியோக்கள் எல்லாத்துக்கும் போட்டித்தன்மை குறைஞ்சிடிச்சு. ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா வரும் பிரபல இசை தட்டுக்களை எல்லோருமே அடிபாடில்லாமல் ஒலிபரப்புகிறார்கள். இந்த வருடத்தில் நண்பனுக்கு பிறகு அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இசை ஆல்பம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’. வெளிந்திருக்கு.. பாட்டுக்களைக் கேட்டன். எல்லாமே பிடிச்சிருக்கு..

அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, தான் போட்ட டியூன்களையே திருப்பத் திருப்ப போட்டு பாடல்களையும் ஹிட்டாக்கும் வித்தையை எப்பிடித் தான் ஹாரீஸ் சார் கத்துக்கிட்டாரோ!

ஓப்பனிங் ஷோங் இல்ல, தத்துவப் பாடல் இல்ல, அருமையான ஐந்து காதல் பாடல்கள். மெலோடில ஹாரீஸை அடிச்சுக்க முடியாது. அதுபோல ஒரு இசை ஆல்பத்துக்கு முத்தாய்ப்பாய் ஒரு பாடல் அமையும். அந்தப்பாட்டா இந்த இசை ஆல்பத்தில ஒரு குத்துப்பாட்டு அமைச்சிடிச்சு. அது லவ் பெயிலியர் பீலிங்ல படிக்கிற படியால் அதுவும் காதல் பாடல் தான். பாடல்களை கவிஞர் முத்துக்குமார் எழுதியிருக்கிறார்.

“அடடா ஒரு தேவதை வந்து போகுதே…”
பாடியவர் : கார்த்திக்

காதலில் விழுந்த ஹீரோ தன்னோட லவ்வரை நினைச்சு நினைச்சு கண்டபடி இந்திரன் மகளா? சந்திரன் மகளா? என்றெல்லாம் வர்ணிச்சு படிக்கிற பாட்டுத்தான். ‘சொந்த பந்த உறவை மறக்க வைச்சாய்..’ என தன்னையும் தன் குடும்பத்தையும் பிரிக்க ஒருத்தி வந்திட்டாள் எண்டுறது தெரிஞ்சும் சந்தோசமா படிக்கிறார். ‘முத்தொடுக்க’ என நினைச்சுத் தான் பல ஆண்கள் காதலில் குதிப்பது வழக்கம். அது ‘மூழ்கிறதுக்கு’ என்பது குதிச்ச பின்னாடி தானே புரியுது. ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘கோவில்’ என சில ஹாரீஸ் படப் பாடல்களையே ஞாபகப்படுத்தியது.

“அகிலா அகிலா என் செடியில் பூப்பூத்ததே…”
பாடியவர்கள் : ஆலாப் ராஜூ, சின்மயி, சர்மிளா

ஹாரீஸை இறுக பற்றி ஒரு ரியூன் எல்லாப்படங்களிலையும் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றது. அது தான் இந்தப் பாடலிலும் தெரிகின்றது. இப்படியான பாடலை வழக்கமாக பாடகர் கிரிஷ் பாடுவார். ஆனால் அவர் இந்த ஆல்பத்திலை எந்தவொரு பாடலையும் பாடேலை எண்டுறது இன்னொரு அதிசயம். இடையில ஒரு வரி வரும் “நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ரோங்கா உன் மனதினில் கால் வைத்தேன் நான் ஸ்ரோங்கா..” பாத்தீங்களாய்யா இந்தக் கொடுமையை? சந்திரனில கால் வைக்கிறது கூட ரொம்ப ஈஸி, ஆனா இந்தப் பொண்ணுங்க மனசில இடம்பிடிக்கிறது எவ்ளோ கஸ்ரம்!

“அழகே அழகே அழகின் அழகே நீயடி..”
பாடியவர்கள் : முகேஷ், ஸ்ரீ மதுமிதா

முகேஷ் எனக்குப் ரொம்ப பிடிச்ச பாடகர். சிறந்த மேடைப்பாடகர். T.M.S போன்ற பழைய பாடகர்கள் போல் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். இவர் சினிமாவில் பிரகாசிப்பதற்கு முதல் தூர்தர்ஷன் சானலில் ஒளிபரப்பப்பட்ட ‘துள்ளாத மனமும் துள்ளும்’ இசை நிகழ்ச்சியில் பழைய பாடல்களைப் பாடுவார். அவ்வளவு அருமையாக இருக்கும். இவருக்கு தமிழில் அதுவும் முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் தொடர்ச்சியாக பாடும் வாய்ப்புக் கிடைக்கின்றது. இப்பாடல் அழகான மெலோடி. ஆண் தன்னோட பக்க ஞாயங்களையும், பெண் தன்னோட பக்க ஞாயங்களையும் அள்ளி விடுறாங்க உதாரணத்துக்கு..
பெண் : பல பல கனவுகள் இருக்கு, அதையேன் சொல்லணும் உனக்கு
மனசு விட்டு பேச நீயும் நண்பனா எனக்கு?
பார்த்ததும் பிடித்தது உனக்கு, பழகிடத் தோணனும் எனக்கு
கானல் நீரில் மீனைத் தேடி அலைவது எதற்கு?
ஞாயமான கேள்வி தான். அதுக்கு நம்மாளு அடிச்சு விடுறான் பாருங்க..
ஆண் : நீ கோயில் தேரடி, மரக்கிளையும் நானடி
என்னைக் கடந்து போகையில் நொருங்குது நெஞ்சம்…

“காதல் ஒரு பட்டர்பிளை போல வரும்..”
பாடியவர்கள் : ஆலாப் ராஜூ, ஹேமச்சந்திரன், சுனிதா சாரதி

“உனக்குள் நானே உருகும் நிலவாய்..” பாடலின் சாயலைக் கொடுக்குது. ஹேமச்சந்திரன் தொடர்ந்து 7ஆம் அறிவு, நண்பன் என ஹாரீஸின் ரீசண்ட் படங்களில் பாடலைப் பாடுகிறார். “மின்சாரம் மேலே கை வைத்துவிட்டேன், ஆனாலும் பெண்ணே விரும்பித்தான் தொட்டேன்” என ஒரு வரி வருகின்றது. பலர் ஆழம் தெரியாமல் காதல் கடலில் கால் வைக்கும் போது தெரிந்தும் இறங்கும் ஹீரோவை என்னவென்று சொல்வது? அதெப்பிடி இப்பிடியான வரிகள் முத்துக்குமாருக்கு சிக்குது எண்டு தெரியவே இல்ல.

“வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு..”
பாடியவர்கள் : நரேஷ் ஐயர், வேல்முருகன்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படப்பாடல்களை டவுண்லோட் செய்ததில் இருந்து இதுவரை இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டிருப்பேன் என எனக்கே தெரியவில்லை. இன்றைய ‘இளைஞர்களின் தேசிய கீதம்’ என்று சொன்னால் அது மிகையில்லை. இது ‘கொலைவெறி..’ பாடல் போல ஆணாதிக்கப்பாடலாக இருந்தாலும் வரிகள் அத்தனையும் உண்மை. பொண்ணுங்களாக ஏமாற்றப்பட்ட பசங்க தானே எப்பவும் இப்படி சோகமாக பாடித்திரியுறாங்க. ஒரு சேஞ்சுக்காவது மாத்தி வையுங்கப்பா! ரசிச்சு பார்ப்பம்.

இந்தப்பாடலின் ஒவ்வொரு வரிகளையும் தாராளமாக பேஸ்புக், ருவிட்டர் என பசங்க போடலாம் (போடுறாங்க) உதாரணத்துக்கு.
கடலைப் போல காதல் Oru Salt wateru
Adhu கொஞ்சம் கரிக்கும் போதே Nee தூக்கிப்போட்டிடு.

மம்மி சொன்ன பொண்ணைக் கட்டினா டாச்சர் இல்லடா,
நீயும் டாவடிக்கும் பொண்ணைக் கட்டினா டவுசர் அவிழும்டா..

கண்ணைக் கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா
எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா

பாட்டுக்கள் வெளிவாறதுக்கு முன்னாடியே படம் நிறையவே எதிர்பார்க்கப்பட்டது. இப்ப இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கப்படுகின்றது. ராஜேஸ் - சந்தானம் வெற்றிக் கூட்டணியில் ‘ஹட்ரிக்’ வெற்றிக்காக காத்திருக்கும் இந்தப் படத்தை விரைவில் காண ஆவல்!

Post Comment

16 comments:

பி.அமல்ராஜ் said...

ஆமாம். நானும் கேட்டேன் வரோ அண்ணா.. பாடல்கள் சூப்பர்.. உண்மைதான், ஹரிஸ் இன் பழைய சில மெட்டுக்களின் சாயல் வந்துபோனாலும் ரசிக்க முடியாமல் இல்லை.

மதுரை சரவணன் said...

padalkal ketka rasanaiyaaka ullathu... pakirvukku vaalththukkal

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

மிக அருமையான அலசல் வரோ! நான் ஹாரிஸ் வெறியன்! எனக்கு எல்லாப் பாடல்களும் ரொம்ப பிடிச்சிருக்கு! சூப்பர் போஸ்ட்!

காட்டான் said...

பாடல்கள் நல்லாதான் இருக்கு இத மட்டும் நம்பி படத்துக்கு போகலாமோ வரோ.? 

KANA VARO said...

பி.அமல்ராஜ் said...
ஆமாம். நானும் கேட்டேன் வரோ அண்ணா.. பாடல்கள் சூப்பர்.. உண்மைதான், ஹரிஸ் இன் பழைய சில மெட்டுக்களின் சாயல் வந்துபோனாலும் ரசிக்க முடியாமல் இல்லை.//

பாஸ், இதென்ன இண்டைக்கு ரெண்டு இடத்தில என்னை ‘அண்ணா’ எண்டு போட்டிட்டீங்க. உங்க வயசென்ன என் வயசென்ன? ஹீ ஹீ செல்லமா தம்பீ எண்டு கூப்பிடுங்கோ.

KANA VARO said...

மதுரை சரவணன் said...
padalkal ketka rasanaiyaaka ullathu... pakirvukku vaalththukkal//

நன்றி பாஸ்

KANA VARO said...

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
மிக அருமையான அலசல் வரோ! நான் ஹாரிஸ் வெறியன்! எனக்கு எல்லாப் பாடல்களும் ரொம்ப பிடிச்சிருக்கு! சூப்பர் போஸ்ட்!//

அதான்யா நானும் பயந்துகிட்டு இருந்தன். எங்க நீர் திட்டிடுவீரோ எண்டு.

KANA VARO said...

காட்டான் said...
பாடல்கள் நல்லாதான் இருக்கு இத மட்டும் நம்பி படத்துக்கு போகலாமோ வரோ.? //

ஒரு எழவும் இல்ல எண்டு தெரிஞ்சும் என்னை நம்பி இந்த ப்ளாக்கை படிக்க வாறீங்க தானே! அதைவிட OK OK எவ்வளவோ பெட்டரா இருக்கும் மாம்ஸ்

ஹேமா said...

இளைஞர்களுக்கேற்ற பாடல்தான்.ம்ம்...நடத்துங்கப்பா.நான் ஏதும் சொல்லேல்ல !

KANA VARO said...

ஹேமா said...
இளைஞர்களுக்கேற்ற பாடல்தான்.ம்ம்...நடத்துங்கப்பா.நான் ஏதும் சொல்லேல்ல !//

அக்காச்சி வணக்கம், நீங்கள் இளைஞி இல்லையோ?

கணேஷ் said...

நிஜம்தான் பிரதர்! நிலவுல கால் வெக்கறதைவிட கஷ்டமான விஷயும்தான் பெண் மனசில இடம் பிடிக்கிறது- முடியாமப் போன என்னை மாதிரி ‘இளைஞர்’(!)களுக்கு! பாடல்களை நல்லா அலசியிருக்கீங்க. நான் இன்னும் கேக்கலை... கேட்டுப் பாக்குறேன்!

Kumaran said...

நான் படத்தில் இன்னும் எந்த பாடல்களையும் கேட்கவில்லை..தங்கள் எழுத்துக்கள் கேட்க தூண்டுகின்றன..நல்ல தெளிவான விளக்கமான பாடல் விமர்சனம்.அழகான பதிவு.நன்றிங்க.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

ஹாலிவுட்ரசிகன் said...

இப்போ ரெண்டு நாளா தொடர்ந்து ரிபீட் மோடில் போட்டு ஒலித்துக் கொண்டு இருக்கும் பாடல்கள்.

கடைசியாக இந்த மாதிரி ரிபிட் மோட் போட்டது “விண்ணைத் தாண்டி வருவாயா”விற்கு தான். எல்லாப் பாட்டும் நல்லா வந்திருக்கு. நல்ல அலசல். நன்றி.

ஆமினா said...

அழகே அழகே பாட்டு மட்டும் பல முறை கேட்டுட்டேன் சளிக்கல!

மத்த பாட்டெல்லாம் இனி தான் கேட்கணும்

நல்ல விமர்சனம் :-)

தனிமரம் said...

பாடலை நல்லாக ஆழ்ந்து கேட்டு இருக்கின்றீங்க என்பதை காதல் நிலை உணர்வுகள் சொல்கின்றது .நான் இன்னும் கேட்கவில்லை.

! சிவகுமார் ! said...

பாட்டு ஹிட் என்றால் படமும் நன்றாக ஓடி விடும்(தியேட்டரை விட்டு அல்ல) என்றே தெரிகிறது. நாளைய சி.எம். எப்படி நடித்துள்ளார் என்று பார்க்கலாம்.