Pages

Monday, March 12, 2012

விஜயின் நாயகி அரசியலில், அவரு எப்போ?

விஜய் சம்பந்தப்பட்ட (துப்பாக்கி) எந்த தகவலும் அண்மைக்காலத்தில வர்ர மாதிரி தெரியல. ஆனா விஜயை சம்பந்தப்படுத்தி அடிக்கடி நியூஸ் வந்திட்டு தான் இருக்கு (நாம எழுதுறதைப் போல).  கிடைச்ச நியூஸை பயன்படுத்திக்கிடனும், ஏன்னா ‘விஜய் பற்றி படிக்கத் தான் உன் ப்ளாக் பக்கமே வாறோம். இல்லைன்னா மழைக்கு கூட உன் ப்ளாக் பக்கம் ஒதுங்க மாட்டம்’ என மிரட்டுராங்க.
உங்களுக்கு ‘ரக்ஷிதா’ வைத் தெரியுமோ? என்னங்க அப்படி புருவத்தை உயர்த்துறீங்க. அதுக்குள்ள மறந்தாச்சா? அது சரி! அவங்க என்ன தமிழ்ல 50  படமா நடிச்சாங்க.. ரெண்டு படம் தானே. அதில ஒண்டு எங்க இளைய தளபதி கூட. அதுதான் ஞாபகம் வைச்சிருப்பீங்க என நினைச்சன்.

சிம்பு கூடவும் ‘தம்’ என்ற ப்ளாப் படம் ஒண்டு நடிச்சாங்க. நம்ம இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய மோசமான படம் அது. யோவ்! ஆருப்பா ‘பகவதியும் இருக்கு’ என மைன்ட்டு வாய்ஸ்ல பேசுறது. தம் படத்தில செம காட்டு காட்டினதாலயோ என்னவோ தெரியல (நடிப்பை பற்றி தான் பேசுறன்) விஜய் கூட சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘மதுர’ படத்தில நடிக்கிறதுக்கான சான்ஸ் கிடைச்சுது. (சூப்பர் - டூப்பர் : இதுக்காக பின்னூட்டத்தில அசிங்கம் பண்ண விரும்புறவங்க பண்ணலாம்)

இளகிய மனம் கொண்ட வாலிப பசங்க பார்க்க வேணாம்.


கொஞ்ச காலம் சினிமா மற்றும் மீடியா பக்கம் இருந்து ஒதுங்கியிருந்த இவங்க மறுபடியும் களத்தில குதிக்கிறாங்க. மீண்டும் சினிமா இல்ல.. அரசியலில்… இது தொடர்பான அறிவித்தலையும் அவங்க விடுத்திருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள்ல வட கர்னாடகத்தையே கலக்கப்போறாங்களாம்!
இன்னொரு பக்கம் விஜய்க்காக தயார் செய்த கதையொன்று அஜ்மலுக்கு போயிருக்கு. விஜய் இப்ப முருகதாஸ் கூட துப்பாக்கி படத்தில நடிச்சிட்டு வாறார். அதைத் தொடர்ந்து கௌதம் மேனனின் ‘யோஹான்’ படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால விஜய் சாரை பிடிக்கிறது கஷ்டம் என்கிறதால அந்தக் கதைக்கு அஜ்மலை புக் பண்ணியிருக்காங்க. ‘யாவரும் நலம்;’ இயக்குனர் விக்ரம் குமாரின் உதவியாளர் ஒருவர் தான் இந்தப்படத்தை இயக்கப்போறாரு.

ஆமா இந்த பதிவில ‘விஜய்’ பற்றி என்ன சொல்லியிருக்கீங்க. அதாங்க ஆரம்பத்திலையே சொல்லிட்டனே! நாங்க என்ன வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணுறம். விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’ படம் முப்பையில் படம்பிடிக்கப்படுகிறது. இது தாங்க மூன்று மாசமா நான் கேள்விப்படுற நியூஸ்.


Post Comment

13 comments:

KANA VARO said...

ஹா ஹா உடனயே மைனஸா, பதிவு ஹிட்டாயிடும்.

Without Investment Jobs Available said...

கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

Yoga.S.FR said...

வணக்கம் வரோ!என்ன இது,யாரைப் பார்த்தாலும் அரசியலில் குதிக்கப் போகிறார்,குதிக்கப் போகிறார் என்று சொல்கிறீர்களே?அது என்ன கிணறா?இல்ல கேணியா???????

Yoga.S.FR said...

இளகிய மனம் கொண்ட வாலிப பசங்க பாக்க வேணாம்.///என்னய்யா இது எம்மாம் பெரிசா தியேட்டரிலேயே பொண்டு,புள்ளைங்களோட எத்தன கோடிப்பேரு பாத்திருப்பாங்க???

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

நல்லாவே குதிக்கட்டும்! வாழ்த்துவோம்! வேறென்ன செய்வது?

அம்பலத்தார் said...

//ஆமா இந்த பதிவில ‘விஜய்’ பற்றி என்ன சொல்லியிருக்கீங்க. அதாங்க ஆரம்பத்திலையே சொல்லிட்டனே! நாங்க என்ன வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணுறம். விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’ படம் முப்பையில் படம்பிடிக்கப்படுகிறது//
அட மாற்றரே அம்புட்டும்தானா?

அம்பலத்தார் said...

Without Investment Jobs Available said...
//கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.//
நாங்களே வேலை செய்யிற அசதிபோக அப்பப்பகொஞ்சம் ஜாலியா இருப்பம் என்று வலைகளை தேடிவந்தா இங்கேயும் வேலை இருக்கு வேலை இருக்கென்று துரத்திட்டு வாறாங்களே தாங்கலடா சாமி........ எஸ்கேப்.
ஹா ஹா வரோ இந்த விளம்பரத்திற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் தாறாங்க.

ரெவெரி said...

ரக்ஷிதா...நமக்கு சூப்பர் சிங்கர் ரக்ஷிதா மட்டும் தான் தெரியும்..-:)

இளகிய மனம் கொண்ட வாலிப பசங்க பாக்க வேணாம் ...-:)

Yoga.S.FR said...

அம்பலத்தார் said...ஹா ஹா வரோ இந்த விளம்பரத்திற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் தாறாங்க.///வரோவுக்கு எதுவும் இல்லை!உண்மையைச் சொன்னால்,அந்த விளம்பரத்தை இட்டவர் பெயர் கூட இல்லை!சுயவிபரப் பார்வையில் தேடினால் வெறுமை!இவரை நம்பி............................அனானி என்று கூட சொல்ல முடியாது.ஒரு வேளை கடவுளோ???????????????????

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...

//வரோவுக்கு எதுவும் இல்லை!உண்மையைச் சொன்னால்,அந்த விளம்பரத்தை இட்டவர் பெயர் கூட இல்லை!சுயவிபரப் பார்வையில் தேடினால் வெறுமை!இவரை நம்பி............................அனானி என்று கூட சொல்ல முடியாது.ஒரு வேளை கடவுளோ???????????????????//
ஆம் யோகா அதை நான் அறிந்ததினால்தான் ஆரம்பவரிகளில் விளம்பர பின்னூட்டம் இட்டவரை கடிந்து எழுதினேன்.
வரோவிற்கு எழுதிய வரிகள் தமாசிற்கு எழுதியது. பின்னூட்டத்தில் தங்கள் பிளாக்கிற்கு அழைப்புவிடுபவர்கள், வியாபார நோக்கிலான இதுபோன்ற விளம்பரங்களை பின்னூட்டத்தில் எழுதுபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் பின்னூட்டத்திற்கான இடம் ஒன்றும் விளம்பரப்பலகை அல்ல என்பதை.

KANA VARO said...

என்ன சுவிஸ் பக்கம் ஒரே மழையோ? சிலரை காணல.

தமிழ்வாசி பிரகாஷ் said...

இன்னும் துப்பாக்கி எடுத்துட்டே இருக்காரா விஜய்...

செய்தி அறிந்து கொண்டேன் வரோ

ஹேமா said...

வரோ...யார் அந்த சிலர்.சொல்லுங்கோ.சொல்லிவிடுறன்.

எனக்கு வியஜ் பிடிக்கேல்ல.அவர் போய் அதுவும் அரசியலில.

சுவிஸ்ல இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெயில் வரத்தொடங்கியிருக்கு.ஏன் மழையை வேண்டிக்கொள்றீங்க !