Pages

Thursday, March 1, 2012

விஜய் பாட்டு + நீங்களும் வெல்லலாம் + இந்துக்களின் போர் = பாயாசம்

கடிகார மணிக்கம்பிகளுக்கு மட்டும் கால்கள் இருந்தால் ஒரு கட்டுப்போட்டு மூலையில் உட்கார வைத்திருக்கலாம். எதிர்காலங்கள் தொலைவில் இருக்கையில் கடந்த காலங்கள் மிக வேகமாக ஓடி மறைந்து விட்டன. நிகழ்காலத்தில் எனக்கு எஞ்சுவது “யோசனைகள்” மட்டுமே! கனவுகள் காணும் அளவிற்கு மன நிம்மதி இல்லை. எப்போதும் கனத்த இதயத்துடன் யோசனைகள் மட்டுமே என் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஓடிக்கொண்டிருக்கின்றது. லண்டன் வந்து ஒரு வருடம் கடந்து விட்டது…

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சில முக்கிய நிகழ்ச்சிகளை அன்றிரவே இணையத்தில் பார்த்து விடுவது என் வழக்கம். அதற்கு சூர்யா தொகுத்து வழங்கும் விஜய் டி.வி யின் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” யும் விதி விலக்கல்ல. இந்த நிகழ்ச்சி இப்படித்தான் அமையும் என தெரிந்திருந்ததால் ‘முட்டையில் மயிர் பிடுங்கும்’ வேலைகளை எல்லாம் சிலரைப் போல் நான் செய்யவில்லை. நிகழ்ச்சி தொடர்பில் பலரும் கேலி செய்யும் ஒரு விடயம் அதில் கேட்கப்படும் சில கேள்விகள். விஜய் டி.வியும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் நினைத்திருந்தால் ஒரு கேள்வியுடனேயே (அதிகபட்சம் மூன்று கேள்விகள்) போட்டியாளர்களை வீட்டுக்கு அனுப்பலாம். அப்படியெல்லாம் செய்யாமல் முதல் வாரத்திலேயே 3 – 4 வறியவர்களை லட்சாதிபதிகள் ஆக்கியிருக்கின்றனர். இந்தச் சேவை தொடர வேண்டும். (மறை முகமாக எஸ்.எம்.எஸ் கள் மூலம் பல கோடிகளை பெறும் அவர்களின் வியாபார நோக்கம் குறித்து நான் கதைக்கவில்லை. உங்கள் யாரையும் அவர்கள் எஸ்.எம்.எஸ் செய்யுமாறு வற்புறுத்தவில்லை)

போனில் சுட்டது
போனில் படத்தை எடுக்கும் போது எல்லாப்படங்களும் நன்றாக வந்து விடாது. சில படங்கள் அருமையாக அமைந்து விடும். இந்தப்படம் மட்டக்களப்பு – வாகரை வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள வெற்றுக்காணி அதன் முடிவில் நீரேரி அதனைத் தொடும் நெடுவானம் என கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றது. கல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு மட்டக்களப்பு சென்ற சமயம் இவ்வைத்தியசாலைக்குச் செல்லக் கிடைத்தது. சகல வசதிகள் இருந்தும் வைத்தியர் பற்றாக்குறையால் அவ்வூர் மக்கள் படும் அவஸ்தைகள் சொல்லில் அடங்காது. அவற்றுக்கெல்லாம் தற்போது தீர்வு கிடைத்திருக்குமா? மக்களின் குறைகளை மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடமும் குறிப்பிட்டிருந்தேன்.

நம்மவர் - மொஹமட் இர்பான்
இலங்கையில் நம் இசைக்கலைஞர்களுக்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவாகவே இருக்கின்றன. இலங்கை ஊடகங்கள் கூட போட்டி போட்டுக்கொண்டு தென்னிந்தியாவில் இருந்தே பாடகர்களை வரவழைத்து இசை நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளும். இந்த சுழல்களுக்குள் எல்லாம் எதிர்நீச்சல் அடித்து பல இசைக்கலைஞர்கள் முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்புக்களை அதிகமாக வழங்குவது அரச வானொலி மற்றும் தொலைக்காட்சி தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இலங்கை வானொலியின் ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் மாதம் ஒரு இசை நிகழ்ச்சி உள்ளுர் கலைஞர்களைக் கொண்டு இன்றும் நடத்தப்படுகின்றது. அதே போல் ரூபவாஹினி – நேத்ரா தொலைக்காட்சியும் முடிந்தளவு உள்ளுர் கலைஞர்களுக்கு உதவுகின்றது.

இந்துக்களின் போர்
’இந்துவின் மைந்தன்’ என்பதில் நான் என்றுமே பெருமை கொள்ளலாம். யாழில் பல இந்துக்கல்லூரிகள் இருந்தாலும் முதலில் ஞாபகம் வருவது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தான். யாழ் இந்து மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆகியன மோதும் ’இந்துக்களின் போர்’ நாளை ஆரம்பமாகின்றது. பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் இந்தத் தொடர் நான் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னரே ஆரம்பிக்கப்பட்டது என்பது வருத்தம் தான். இல்லாவிட்டால் எப்படியெல்லாம் கொண்டாடியிருக்கலாம். நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இந்தப் போட்டியில் என் பாடசாலை வெற்றி பெற பிரார்த்திக்கின்றேன்.

துப்பாக்கியில் விஜய் பாட்டு

ஏழு வருடங்களின் பின் விஜய் ரசிகர்களின் ஆசை ஒன்று பூர்த்தி செய்யப்படப்போகின்றது. இளைய தளபதி இடையிடையே தனது படங்களில் பாடல் ஒன்றைப் பாடி வந்தார். ஆனால் அது சச்சின் திரைப்படத்திற்குப் பின்னர் இடம்பெறவே இல்லை. பொதுவாக விஜய் படங்களில் பாடல்கள் செம ஹிட்டாகிவடும். அதிலும் விஜய் பாடும் பாடல்கள் ஒவ்வொன்றும் டபுள் ஹிட் தான். ஏர்.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் மும்பையில் தயாராகிவரும் துப்பாக்கி திரைப்படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இன் இசையில் விஜய் பாடல் ஒன்றைப் பாடுகின்றார் என்பது லேட்டஸ்ட் தகவல்.

வை திஸ் கொலவெறி டி – லேட்டஸ்ட் வேர்ஷன்


ஒட்டு மொத்த இசை ரசிகர்களையும் ஒரே பாட்டால் கட்டிப்போட்ட தனுஷின் ‘கொலவெறி..’ க்கு யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டாவது வேர்ஷன் வந்திருக்கின்றது. முதல் வந்த வேர்ஷன் சற்று கார சாரமாக தனுஸைப் பேசி வந்தது. இது முற்று முழுதாக ஜாலியாக இளசுகள் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள். யாழில் இருந்து வரும் இப்படியான முயற்சிகள் முதலில் பாராட்டப்பட வேண்டும். பிறகு அதன் தரம் பற்றிக் கதைக்கலாம்..


கூல் ஸ்பொட்

நம்மவர்களின் கதை பேச இங்கே கிளிக்குங்கள்..

Post Comment

8 comments:

PREM.S said...

//முதல் வாரத்திலேயே 3 – 4 வறியவர்களை லட்சாதிபதிகள் ஆக்கியிருக்கின்றனர்//உண்மை உண்மை

//உங்கள் யாரையும் அவர்கள் எஸ்.எம்.எஸ் செய்யுமாறு வற்புறுத்தவில்லை)//உண்மை அன்பரே

Yoga.S.FR said...

வணக்கம் வரோ!வெள்ளிக்கிழமையும் அதுவுமா பாயாசம் தந்திருக்கிறியள்.வடை ஆர் தாறது?ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

கடிகார மணிக்கம்பிகளுக்கு மட்டும் கால்கள் இருந்தால் ஒரு கட்டுப்போட்டு மூலையில் உட்கார வைத்திருக்கலாம். எதிர்காலங்கள் தொலைவில் இருக்கையில் கடந்த காலங்கள் மிக வேகமாக ஓடி மறைந்து விட்டன. நிகழ்காலத்தில் எனக்கு எஞ்சுவது “யோசனைகள்” மட்டுமே! கனவுகள் காணும் அளவிற்கு மன நிம்மதி இல்லை. எப்போதும் கனத்த இதயத்துடன் யோசனைகள் மட்டுமே என் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஓடிக்கொண்டிருக்கின்றது. லண்டன் வந்து ஒரு வருடம் கடந்து விட்டது…//அதிகமான புலம்பெயர் வாசிகளின் மனநிலையின் வெளிப்பாடு. போகவேண்டிய தூரம் போகவில்லை என்று என்னுவது வருடத்தைச் சொன்னேன்!

தனிமரம் said...

இல்லை. இலங்கை வானொலியின் ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் மாதம் ஒரு இசை நிகழ்ச்சி உள்ளுர் கலைஞர்களைக் கொண்டு இன்றும் நடத்தப்படுகின்றது. அதே போல் //உண்மை தான் அதில் வந்த கலைஞர்களின் திறமை புடம்போடப்பட்ட தங்கம் அப்படியானவர்களுக்கு வாய்ப்புக்கள் கொடுக்காமல் நாம் அயல்நாட்டில் இருந்து கொண்டுவந்து செய்யும் நிகழ்ச்சிகளில் சாதித்தது என்ன எப்பதான் முழிக்கப்போறம்???

தனிமரம் said...

வெள்ளிக்கிழமை வடை கேட்கின்றார் யோகா ஐயா ! ஆரியபகவானில் காசுகொடுத்து வாங்கனும் மருதனார்மடம் அஞ்சநேயரிடம் சனிக்கிழமை போனால் இலவசமாக கிடைக்கும் அவர் க/கில் ஒரு பால்கோப்பியும் சேர்த்துச் சொல்லுங்க. பக்கத்து இலைக்குப்பருப்பு வேனும் என்பதை மாற்றுவம்.ஹீஹீ

ரெவெரி said...

பாயாசம் இனித்தது...திகட்டவில்லை..

ஹேமா said...

பாயசம் சுவை.வரோ நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சூர்யாவின் நிகழ்ச்சி நல்லதே செய்கிறதா.அப்படியானால் நல்லதே !

பி.அமல்ராஜ் said...

நல்ல பாயாசம் வரோ அண்ணா..