Pages

Tuesday, February 28, 2012

பலதும் பத்தும் - இந்தவாரம் பதிவர் மகேந்திரன்


நான்கைந்து மாத இடைவெளியின் பின்னர் மீண்டும் ‘பலதும் பத்தும்’ பகுதியூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதை சீஸன் 2 ஆக வைத்துக் கொள்வோம். சீஸன் 1 இல் பதிவுலகம் பற்றி பதிவர்களிடம் கதைக்கவில்லை. இம்முறை மற்றவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தாத பதிவுலகம் சம்பந்தமான கேள்விகளை பதிவர்களிடம் கேட்கலாம் என நினைக்கின்றேன்.

இந்தவாரப் பதிவர் யார்? பொதுவாக வலையுலகில் கவிதை என்றதும் “பெண் பதிவர்கள்” தான் ஞாபகத்துக்கு வருவார்கள். இவர் ஒரு ஆண் பதிவர். கவிதைப் பதிவுகளுக்கு வாக்குகள், பின்னூட்டங்கள் கிடைப்பதென்பதே பெரிய விடயம். ஆனால் இவரது ஒவ்வொரு பதிவுக்கும் கணிசமான வாக்குகளும், பின்னூட்டங்களும் கிடைக்கின்றன. கொஞ்;சம் பின்னோக்கிப் பார்த்தோமானால் இவரது ஆரம்ப ஐந்து பதிவுகளுக்கும் பின்னூட்டங்களே கிடைக்கவில்லை. ஒரு கவிதைப்பதிவனுக்கு பதிவுலகில் கிடைக்கும் மரியாதை அது தான். பிறகெப்படி இவருக்கு இப்போது இவ்வளவு அங்கீகாரங்கள்…? அதற்கான விடையை அவரே இரண்டாவது கேள்விக்கு பதிலாக கொடுத்திருக்கிறார்.

பதிவுலகத்திற்கு வந்த ஒருவருட காலத்திற்குள்ளேயே தமிழ்ப்பதிவர்கள் பலரும் இவர் பெயரை அறிந்திருக்கிறார்கள். இவரது பெயரும் பின்னூட்டங்களாக பலர் பதிவுகளில் இருப்பதை வைத்துக் கொண்டு ஏனையை பதிவர்களையும் எப்படி அரவணைத்து, உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்தியப் பதிவரான இவர் பதிவுலகில் எனக்குக் கிடைத்த முன்பின் அறிமுகமில்லா நட்புக்களின் ஒன்று.

சரி, இந்தவாரப் பதிவரிடம் நான் கேட்ட 10 கேள்விகளையும், அதற்கு அவர் தந்த பதில்களையும் பார்ப்போம்.பேட்டி கொடுக்கும் அளவுக்கு என்னிடம் விடைகள் இருக்குமென நீங்கள்
தீர்மானித்ததற்கு நன்றிகள்.
நிச்சயம் என்னால் இயன்ற அளவு விடைகள் தருகிறேன்..
நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை
உண்மையைத் தவிர வேறு இல்லை...........

1 . நீங்கள் முதலில் எழுதிய காதல் கவிதை எது? (ஞாபகம் இல்லாவிட்டால் முதற்கவிதை)

வஞ்சி

வஞ்சியவள் பிஞ்சுமொழி
கொஞ்சி வந்து
நெஞ்சமதை நிறைத்தாள்!

இஞ்சி இடை பஞ்சு உடல்
மஞ்சள் நிலா போல வந்து
மஞ்சமதில் அணைத்தாள்!

புள்ளி மயில் இல்லமதில்
மல்லிகையை அள்ளிக் கொண்டு
துள்ளி வந்து நின்றாள்!

அல்லியிதழ் கள்ளியவள்
வெள்ளி நிலா மறைத்து
பள்ளியறை வந்தாள்!

மொட்டுமலர்க் கட்டழகி
பட்டு உடல் தொட்டு விட
விட்டு விட்டு தந்தாள்!

முத்தமிழின் சித்திரத்தாள்
உத்தரமாய் ஆழ்மனதில்
சத்தமின்றி அமர்ந்தாள்!

முத்திரையால் நித்திரையை
இத்தரையில் என்னை
தத்தளிக்க வைத்தாள்!!

இதுவே நான் முதன்முதலில் எழுதிய காதல் கவிதை.

2. ஒரு பதிவனாக எப்போதாவது எதற்காகவேனும் வருத்தப்பட்டதுண்டா?

வருத்தமே இல்லை என நான் பொய் சொல்ல விரும்பவில்லை. தற்போது அந்த வருத்தம் இல்லை. எனினும் ஆரம்ப காலகட்டத்தில் வருத்தப்பட்டது உண்மை. என் பதிவுகளுக்கு ஆரம்ப காலகட்டங்களிலிருந்து
ஆதரவு கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் நான் இங்கே கண்டு கொண்ட ஒரு மிக முக்கியமான விஷயம், கொடுக்கல் வாங்கல் என்பது. நீ என் பதிவுக்கு வந்து கருத்துரைத்தால் நானும் உன் பதிவுக்கு வருவேன் என்று திருமணத்திற்கு மொய் எழுதுவது போல ஒன்று இருப்பதை உணர்ந்தேன்.... எல்லோரும் அப்படியல்ல .. ஆனால் சிலர் அப்படித்தான்.
நான் இதுவரை அதை கண்டுகொள்ளவில்லை. என்னால் இயன்ற அளவுக்கு நான் தொடர்பவர்களுக்கும் புதிதாய் திரட்டிகள் மூலம் தென்படுபவர்களுக்கும் சென்று கருத்திடுவேன்.

3. ஐந்து வங்கிக் கொள்ளையர்களின் கொலை பற்றிய தங்கள் கருத்து என்ன?

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் எனக்கு இந்த திட்டமிட்ட கொலை பற்றி மகிழ்ச்சியே, கொலை செய்யப்பட்டவர்கள் உண்மையான கொள்ளையர்களாய் இருக்கும் பட்சத்தில். வாயைக்கட்டி வயித்தைக்கட்டி  சிறுசிறு துளியாய் சேர்த்து நாளைக்கு நமக்கும் நம் சந்ததிக்கும் வேண்டும் என சேர்த்து வைத்த பொருட்களை திருடிக்கொண்டு செல்வது மட்டும்
அல்லாது. அதை தடுக்க வரும் பொருளுக்கு சொந்தக்காரர்களை அரக்கத்தனமாய் கொலை செய்துபோடும் அந்த கொள்ளையர்களை தொட்டிலில் போட்டு கொஞ்சவா முடியும். இதுவே சரியான தண்டனை.
மனிதம் இருக்கும் இடத்தில் நேயம் காட்டவேண்டும். மனிதத் தன்மையே இல்லாதவர்களிடம் மனித நேயத்தை காட்டுவது.. வெறும் உரலில் அரிசி குத்துவது போலத்தான்...

4. வடிவேல் முருகா படத்தில் சொல்வதைப் போல உங்களுக்குள்ளும் பல ரூபங்கள் இருக்கின்றதா? அவை எப்போதாவது வெளிப்பட்டதுண்டா?

Multiple personality - பன்முக குணபாடு சில நேரங்களில் ஏற்படுவதுண்டு. இருசக்கர வாகனத்தில் செல்கையில் எதிர்வரும் வாகனங்களுக்கும் ஒலி எழுப்பானை அழுத்தி அழுத்தி சத்தம் எழுப்புவோரையும் அதிவேக
ராக்கெட் போல வாகனத்தை கதற கதற ஒட்டுவோரையும்  கண்டவுடன் ரௌத்திரம் தாண்டவமாடும்.. ஒருமுறை இதுபோன்ற சம்பவம் நடக்க அங்கு காவல்துறைக்கு செல்லும் அளவுக்கு அடிதடி ஆகிவிட்டது. அப்புறம் சுற்றி இருந்தவர்கள் விளக்கி வைத்தார்கள்.

5. குடும்பம் - வேலை தவிர்ந்து அதிகமாக பொழுதைச் செலவழிப்பது எதற்காக?

குடும்பம் - வேலை இந்த இரண்டிற்குப்பிறகு கடந்த ஓராண்டிற்கு முன்னர் வரை நிறைய புத்தகங்கள் படிப்பதற்காக நேரம் செலவிடுவேன். பொதுவாக இரசாயன தொழில் நுட்பங்களை (Chemical technology) அவ்வப்போது
புதுப்பித்துக்கொள்வேன். நிறைய நாட்டுப்புற இலங்கியங்கள் சம்பந்தமான புத்தகங்கள் படித்திருக்கிறேன். நம் கிராமிய கலாச்சாரம் சொல்லும் புத்தகங்களை தேடி தேடி படிப்பேன். இப்போது குடும்பம்-வேலை தவிர  உதிரி நேரங்கள் எல்லாம் வசந்தமண்டபம் மட்டுமே கதியாக இருக்கிறேன்.

 6. அண்மையில் பார்த்த திரைப்படம் பற்றி..?

இரு மாதங்களுக்கு முன்னர் நான் பார்த்த திரைப்படம் "எங்கேயும் எப்போதும்" படத்தின் இயக்கமும் அந்த படத்தை தூக்கி நிறுத்திய கதையம்சமும், நடிகர்களும், தொழில்நுட்பமும் என்னை மிகவும் கவர்ந்தது. இயல்பான நடிப்பில் அசத்தி இருந்தார்கள் அந்த படத்தில் வரும் நடிகை ஆனந்யாவின் அக்காவாக வரும் குணாதிசயம் மிக யதார்த்தமாக புனையப்பட்டிருந்தது. அத்தனை பெரும். அந்தப் படத்தின் கரு தேசத்தின் அத்தனை பேரையும் சென்றடைய வேண்டும்.

 7. துரோகிகள் அல்லது எதிரிகளை மண்டியிடச்செய்த (மன்னிப்பு கேட்குமளவிற்காவது) சந்தர்ப்பம் உண்டா?

அப்படி எதுவும் இதுவரை நடந்ததில்லை. பொதுவாக என்னுடைய குணம் அது, யாருடனும் அதீத விவாதங்களில்  ஈடுபடுவது கிடையாது (மனைவியைத் தவிர). என் மீதான பொறாமைக்குணம் காரணமாக பணியிடங்களில் சில சிறு கோபத்தில் இருந்தவர்கள் கூட நாட்கள் செல்லச் செல்ல கோபத்தில் இருந்து மீண்டு இணக்கமானதுண்டு.

" இருக்கின்ற வாழவிதனை
இன்முக மொழியோடு
மற்றவர் இனித்திடச் செய்திடுவாய்
போட்டிகள் நிறைந்த இப்புவியில்
போராடி வென்றிடவே
பலவற்றை கற்றுக்கொண்டு
பகல்வேஷம் போடாது
பன்முகம் காட்டிடுவாய்"

எனபதே என் தாரக மந்திரம்.

8. கஸ்டம் வரும்போதெல்லாம் யாரை நினைத்துக் கொள்வீர்கள்? எதற்காக?

நிச்சயமாக என் தந்தை தான்.

" பிறந்த நாள் முதல்
இறக்கும் வரையிலும்
கவலைகள் முகத்தில்
ரேகைகள் இட்டாலும்
மற்றவரிடத்தில் இரவா
நிலைதனை சிரமேற்கொண்டு
கையில் இருக்கின்ற
பொருளதனை அதுகூட
இல்லாதவருக்கு கொடுத்து
மகிழும் குணமதை
எனக்கு செவ்வனே விட்டுச்சென்ற"

என் தந்தையே துன்பப்படும் தருவாயில் நான் நினைத்துக்கொள்ளும் மகத்தான மனிதர்.

இறக்கும் தருவாய் வரையிலும் ..
" அய்யா.. நீ எது செய்தாலும் நல்லதுதான் செய்வ
நல்லா யோசித்துதான் செய்வ..
ஆனாலும் கொஞ்சம் நிதானமா நடந்துக்கோ"
என்று எப்போதும் நேர்மறை எண்ணங்களையே என்னுள் விதைத்து
எனக்கு வாழ்வில் தன்னம்பிக்கையை ஊட்டியவர்.
அப்பா இறந்த பின் எனக்கு ஒரு கை முறிந்தது போல இருந்தாலும்
அவர் கொடுத்த நம்பிக்கைகள் அதை மீட்டெடுத்தன.......

9. அரசியலில் ஈடுபாடு உண்டா? பிடித்த அரசியல் தலைவர் யார்?

அரசியல் பிடிக்கும். ஆனால் ஈடுபாடு என்பது கிடையாது.
அரசியலை நரகசியலாய் மாற்றிக்கொண்டிருக்கும் இன்றைய
அரசியல்வாதிகள் பற்றி சொல்வதற்கும் ஒன்றும் இல்லை.

ஆனால் என்றும் என்றென்றும் நான் மதிக்கும் ஒரு அரசியல் தலைவர்
கர்ம வீரர் காமராசர் மட்டுமே. தொலைநோக்குப் பார்வையுடன்
செயல்பட்ட ஒரு மாபெரும் மனிதர். இன்றைய தென் தமிழகம்...
அதாவது தூத்துக்குடிக்கு தெற்கே... விவசாயத்திற்கு தேவையான
நீர்வளத்தை மற்ற மாநிலங்களை அண்ட வேண்டிய காரணம் இல்லாமைக்கு
முக்கிய காரணம் சேர்வலாறு அணைக்கட்டு. அதை உருவாக்கித் தந்தவர்
இந்த மனிதர்.

அதுமட்டுமில்லாது... எளிமை
அவருக்குப் பின்னர் எந்த அரசியல்வாதியிடமும் இதுவரை
காணமுடியாத ஒன்று..

" ஒருமுறை அவரின் அமைச்சகத்தில் இருந்த ஒரு அமைச்சரின் மகள் திருமணம்..
பத்திரிகை வைக்க சென்ற போது ...
' நான் அன்று ஊரில் இருக்க மாட்டேன் .. அதனால் வரமுடியாது..
நீயே நடத்திவிடு என்று சொல்லிவிட்டார்'
அதை சகிக்கமுடியாது அந்த அமைச்சர் மகளின் திருமணத்தை
நகராட்சி மண்டபத்தில் வைத்து எளிமையாக நடத்திக்கொண்டிருந்தார்..
சட்டென்று ஒரு கார் வந்து நிற்க..
அதிலிருந்து காமராசர் இறங்கினார்..
அமைச்சருக்கு ஆனந்தம் ஒருபுறம்.. கோபம் ஒருபுறம்...

காமராசர் சிரித்துக்கொண்டே சொன்னார்..
" நான் வருவேன் என்று சொன்னால் நீ தடபுடலாக ஏதாவது
ஏற்பாடு செய்வாய். அதை நான் விரும்பவில்லை.
இந்த மாதிரி தருணத்தில் வரவேண்டும் என நான் நினைத்தேன் ..
செய்தேன் என்றார் "

இப்படி ஒருவரை இன்று பார்க்கமுடியுமா????

10. நீங்கள் விரும்பிப் படித்த புத்தகம் எது? ஏன்?

என் மனதிற்கு இனிய எழுத்தாளர், எழுத்துலகில்
மூத்தவர், தனக்கென்று தனிபாணியை கொண்டவர்...
திரு.நாஞ்சில்நாடன் அவர்களால் .. நான் பொறாமைப்படும்
எழுத்தாளர்களில் முக்கியமானவர் இவர் என சுட்டிக்காட்டப்பட்ட
திரு.கி.இராஜநாராயணன் அவர்கள்.

கி.ரா எழுதிய "கோபல்லபுரத்து மக்கள்" என்ற நாவல் தான் எனக்கு
மிகவும் பிடித்த புத்தகம். மனம் எந்த நிலையில் இருந்தாலும்
அந்த புத்தகத்தை வாசித்து கிரகித்துக்கொள்ள முடியும்.

கோவில்பட்டி ஊரின் சுற்றுப்புற கிராமிய மக்களின் வாழ்க்கையையும்
அவர்களின் மொழிநடையையும் அச்சுபிசகாமல் எழுதி இருப்பார்.
படிக்க படிக்க நெஞ்சில் தேனூறும்.

அன்புநிறை நண்பர் வரோதயன்,
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் கொடுத்துவிட்டேன் என நினைக்கிறேன்.
ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.
நன்றிகள் பல.

அன்பன் 
மகேந்திரன்


இவரது தளம்

Post Comment

56 comments:

மேகா said...

நல்ல கேள்வி பதில் தொகுப்பு

...αηαη∂.... said...

அட இப்போ தான் இவர பத்தி கேள்வி படுகிரேன்.. இனிமே போய் பாக்குறேன்..

காட்டான் said...

வணக்கம் வரோ!
பதிவுலகில் தவிர்க்க முடியாதவரின் பேட்டி அருமை.! இவர் என் சொந்தம் என்பதில் எனக்கு இன்னும்பெருமை.
காமராசரை பற்றி கூறியது அருமை. மாப்பிளைக்கும் மருமோனுக்கும் வாழ்த்துக்கள்.!!

mum said...

கலக்குங்க நண்பா... வாழ்த்துக்கள் !!!

துஷ்யந்தன் said...

வரோ பலதும் பத்தும் சீசன்-2 க்கு முதல் பதிவரையே எல்லோருக்கும் புடிச்ச பதிவராய் எடுத்து இருக்கீங்க :)

மகேந்திரன் அண்ணாவை எல்லோருக்கும் புடிக்கும்.... ஆனாலும் எனக்கு ரெம்ப ரெம்ப புடிக்கும்... அவர் மிக நல்ல மனிதர்..... பழகி பார்த்தவர்களுக்கு இது தெரியும்....

அவர் கவிதைகள் எல்லாமே..... அவ்ளோ அசத்தலாய் இருக்கும்..... :)

என்னுடைய தொடர் ஒன்று முடிந்ததும் அதை அவர் விமர்சனமாய் எனக்கு எழுதி தந்து அதை என் வலையில் பிரசுரித்து இருந்தேன்.... அதை படித்தவர்கள் எல்லோரும் சொன்னது ஒன்றுதான் "துஷி உன் தொடரை விட இந்த விமர்சன கவிதை சூப்பர்" என்று..... உண்மையில் அவ்ளோ அழகா தொடர் முழுவதையும் கவிதையாய் வடித்து அசத்தி ஆச்சரியப்பட வைத்தார். ரியலி கிரேட் மகேந்திரன் அண்ணா.... :)

வரோ... உங்கள் கேள்விகளுக்கும் மகேந்திரன் அண்ணா அழகா பதில் சொல்லி அசத்தி இருக்கார்.... படிக்கும் போது கேள்விகள் இன்னும் நீண்டு இருக்க படாத என்று ஆதங்கமாய் இருக்கு :( விடைகள் அவ்ளோ சுவராசியம்+தெளிவு+உண்மை.

குறிப்பாக வங்கி கொள்ளைக்காரர்கள் கொலை பற்றி அன்னான் சொன்ன பதில்கள் நெற்றியடி... அந்த கொள்ளைக்காரர்களை கொலைசெய்ததுக்கு அங்கங்கு கண்டங்கள் இப்போ முளைப்பது மிக தவறு...... போலீஸின் திறமையை பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தாமல் இப்படி அவர்களை அவமான படுத்துவது அவர்களை முடக்கி போட்டுவிடும். இதில் என் முடிவே அண்ணனின் பதில் ஆனதில் எனக்கு ரெம்ப சந்தோஷம். தேங்க்ஸ் அண்ணா :)

மகேந்திரன் அண்ணாக்கு நன்றி சொல்வதோடு..... அண்ணாவிடம் பேட்டி எடுத்து பதிவிட்ட வரோக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ் :)

துஷ்யந்தன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

வணக்கம் வரோ பாஸ்,
மற்றும் மகேந்திரன் அண்ணாச்சி,,

முதலில் பதிவுலகில் நிறைவான கருத்துக்களால் பலரையும் ஊக்கப்படுத்தும் எளிமையின் சிகரத்தை பேட்டி கண்டு எம்மோடு பகிர்ந்த உங்கள் முயற்சிக்கு நன்றி.

நீண்ட நாட்களாக பதிவுலக பக்கம் வர நேரம் கிடைக்கலை. இன்றைய தினம் உங்கள் பதிவில் மகேந்திரன் அண்ணாவின் பேட்டியில் கொஞ்சம் மனம் விட்டு பேசிட்டு போகலாம் என வந்துள்ளேன்.

நிரூபன் said...

முதல் கவிதையே சந்தம் பொழிந்து வர சிந்திசைக்கிறது!

அண்ணரின் கவிதைகளின் தனிச் சிறப்பே,
அடுத்தடுத்த வசனங்கள் வரிசைக்கிரமாம வரும் வண்ணம் ஒரே வகையான எழுத்துக்களை கோர்வையாக்கி எழுதுவது! இதனை யாராலும் இலகுவில் செய்ய முடியாது என நினைக்கிறேன்.

கவிதையில் விடுகதை எழுதுவதும் எல்லோராலும் முடியாத ஒரு விடயம். அதனையும் அழகுறச் செய்வதில் இவருக்கு நிகர் இவரே.

நிரூபன் said...

அருமையான பேட்டியினை கொடுத்திருக்கிறார்.

அவரது உருவம் போலவே மனமும் வெள்ளை என்பதற்குப் பதில்கள் ஒவ்வொன்றும் கட்டியம் கூறி நிற்கின்றன.

வரோவுக்கு நன்றிகள்.
மகேந்திரன் அண்ணருக்கு மீண்டும் சிறியேனின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

கோகுல் said...

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமை இவரது பதில்களில் தெரிகிறது.
உங்கள் கேள்விகளுக்கு நண்பரின் பதில்கள் ரசனை.

கோகுல் said...

காதல் கவி அருமை.தளை தட்டாமல்.

Yoga.S.FR said...

வணக்கம் வரோ&மகேந்திரன்!அருமையாக இருந்தது.பொதுவாகவே பேட்டி என்றால் கேட்பவரும் பதில் சொல்பவரும் வானத்திலிருந்து குதித்து வருவார்கள்!பூவுலகில் ஓர் பேட்டி கொடுத்தமைக்கு நன்றி!!!!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

நண்பர் மகேந்திரனுக்கும், வரோவுக்கும் வாழ்த்துக்கள்! நல்ல கேள்விகளும், அருமையான பதில்களும்! நிறைவான ஒரு பேட்டி படித்த திருப்தி! வரோ தொடரட்டும் உங்கள் பணி.....!

KANA VARO said...

முன்பின் அறிமுகமில்லாவிட்டாலும் இவர் பதிவுகளைக் கொண்டும், மற்றைய பதிவர்களை அணுகும் விதத்தைக் கொண்டும் மகேந்திரன் அண்ணன் கள்ளம் கபடமில்லாதவர் என்பது நன்கு புலப்படுகின்றது. தொடர்ந்தும் இவரது பதிவுலக பயணம் சிறப்பாக அமைய வேண்டுகின்றேன்.

KANA VARO said...

இங்கு கருத்திட்ட ஏனைய நண்பர்களது கருத்துக்கு அண்ணர் வந்து பதிலளிப்பார் என எதிர்பார்க்கின்றேன். அவர் அபுதாபியிலிருந்து இன்று இந்தியா வருகிறார் என்பது மேலதிக தகவல்.

அம்பலத்தார் said...

மீண்டும் பதிவர் கேள்வி- பதிலை ஆரம்பித்ததற்கு நன்றி வரோ. பதில் தந்த, பதிவுலகின் இனிமையான அன்பர் மகேந்திரனிற்கும் வாழ்த்துக்கள். சிறப்பான பதில்கள் தந்திருக்கிறார். தூக்குத்தண்ண்டனையே வேண்டம் என்ற கருத்து உலகெங்கும் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கும் காலத்தில் என்கவுன்டரை நியாயப்படுத்தியதைமட்டும் ஏற்கமுடியவில்லை.

அம்பலத்தார் said...

மகேந்திரன் முதற் காதல் கவிதையே ரொம்ப ரொமாண்டிக் ஆகத்தான் எழுதி இருக்கிறிங்க

தனிமரம் said...

வணக்கம் வரோ&மகேந்திரன் அண்ணா!
கவிதையால் வசந்த மண்டபம் கட்டியவரின் கதகதப்பான பல்சுவைக்கேள்விகளுக்கு பண்பாக பதில் தந்து நெஞ்சில் வஞ்சம் இல்லாத அழகிய போட்டோவையும் பகிர்ந்ததற்கு நன்றி முதலில்!

அம்பலத்தார் said...

மகேந்திரன் உற்சாகமூட்டும் கருத்துக்களிற்கும் உங்க எளிமையான குணத்திற்கும், காரணம் நீங்க நேசிக்கிற உங்க அப்பாவும், தலைவர் காமராஜரும்தான் காரணம் என இப்பொழுது புரிகிறது.

தனிமரம் said...

கவிதையில் இவர் தரும் பின்னூட்டம் எனக்கு தொடர்ந்து எழுதனும் என்ற ஆர்வத்தைத் தரும் அந்த வசிகரம் கொண்ட மகேந்திரன் அண்ணாவின் காமராஜர் பற்றி விபரிப்பு பிடித்திருக்கு.குடும்பம் தாண்டி தன் வசந்த மண்டபத்தில் எங்களுடன் கைகோர்த்து இருப்பதில் இவர் எங்களுக்கு அண்ணர்.

தனிமரம் said...

இந்த பேட்டி இன்னும் நீண்டு இருந்தால் அதிகம் சந்தோஸப்பட்டிருப்பன்.

தனிமரம் said...

இப்படியான பேட்டிகள் தொடர வேண்டும் வரோ. நண்பர்களின் விசாலமான சிந்தனையை இவற்றில்தான் கானமுடியும்.சமூக நிலையில் வங்கிக்கொள்ளை பற்றிய பார்வை சரிதான்.

இராஜராஜேஸ்வரி said...

வஞ்சி

வஞ்சியவள் பிஞ்சுமொழி
கொஞ்சி வந்து
நெஞ்சமதை நிறைத்தாள்!

கம்பர் மெல்லினங்களாலேயே சூர்ப்பணகையை வர்ணித்து எழுதிய அழகான பாடல் வரிகள் நினைவில் வ்ந்தன்...

மிக அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

தரமான கேள்விகள்... தரமான பதில்கள். அருமை.. அருமை. தொடருங்கள். வாழ்த்துகள்.

kovaikkavi said...

இன்று தான் இங்கு வந்தேன். நன்றாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்தகள்.
வேதா. இலங்காதிலகம்.

துரைடேனியல் said...

அருமையான பேட்டி. அத்தனை கேள்விகளும் நறுக். மகேந்திரன் அவர்களின் பதில் நச். அவர் எனக்கு மிகவும் பிடித்த பதிவர்.

புலவர் சா இராமாநுசம் said...

அன்பரே!
தம்பி மகி பற்றிய தங்கள்
பதிவைப் படித்தேன்!
அருமை!கேள்வியும் சரி பதிலும்
மகியை என் உற்ற தம்பியாக நினைப்பதில் மிகவும் பெருமைப் படுகிறேன்
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
சா இராமாநுசம்

Rathnavel Natarajan said...

அருமையான நேர்காணல்.
அருமை நண்பர் மகேந்திரனுக்கு மனப்பூர்வ வாழ்த்துகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் வரோதயனுக்கு
என் இனிய காலை வணக்கம்,

ஊருக்கு வந்த உடன் வந்து பார்த்தேன்..

என் மனதில் மனதில் உள்ளதை உள்ளபடி சொல் ஒரு
வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றிகள் பல.
எனக்கும் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நிறைய
பதில் சொல்லவேண்டும் என ஆசை..
ஆனால் நேரம் போதவில்லை.
என் பதில்களுக்காக உங்களை நீண்ட பொழுதுகள்
காத்திருக்க வைக்கவும் விரும்பவில்லை.

மனம் மகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பரே.
என் மீது அசையாத பாசம் வைத்திருக்கும்
அன்புநிறை பாச உறவுகள் நிறைந்த இப்பதிவுலகில்
என்னுடைய நேர்காணலை வெளியிட்டமைக்கு..
என் கோடானுகோடி நன்றிகள்.

மகேந்திரன் said...

வாருங்கள் மேகா அவர்களே,
நேர்காணலை ரசித்தமைக்கு நன்றிகள் பல.

மகேந்திரன் said...

நண்பர் ஆனந்த
உங்கள் வரவை என் வசந்தமண்டபம்
வாசப் பன்னீருடன் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது...

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
பதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் சொந்தம் நீங்கள்.
உங்கள் ஆசிகள் எனக்கு எப்போதும் உண்டு .....

பெருந்தலைவர் காமராசரை என் கண்களாய் கண்டதில்லை
அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.
அவர் சரிதைகளை படிக்கும் போதெல்லாம்..
அவர் செய்த அத்தனை சாதனைகளை நினைக்கும் போதெல்லாம்
அன்று நாம் பிறந்திருக்கக் கூடாதா என்ற எண்ணம் மேலோங்கும்.

மகேந்திரன் said...

எங்கிருப்பினும்..
எங்கெங்கு சென்றிடினும் எம்மை தேடி வந்து
எனக்கு வாழ்த்துரைக்கும் தோழி மும்தாஜ்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள் தங்களுக்கு...

மகேந்திரன் said...

அன்புத் தம்பி துஷி,
வணக்கம்,
நலம் தானே......

உங்களுடைய "வாத்தை தவறிவிட்டாய் கண்ணம்மா"
என்ற நாவலை காதல் ரீதியாய் நான் எடுத்துக்கொள்ளவில்லை.
அதில் வரும் சம்பவங்களும் சம்பாசனைகளும்..
நம்முடைய கலாச்சாரம் தொட்டுச் செல்லும் முறை எனக்குப் பிடித்திருந்தது..

அந்த உங்கள் தொடருக்கு எனக்கு கவிதை எழுத வாய்ப்பு
கிடைத்தமைக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

வங்கிக் கொள்ளையர்கள் பற்றியது என்னுடிய தனிக்கருத்து தம்பி இது.
நீங்களும் இதில் ஒத்துப்போவது எனக்கு மகிழ்ச்சியே.

மகேந்திரன் said...

அன்புச் சகோதரர் நிரூபன்
வாங்க வாங்க
வணக்கம்
நலமா?

என் பதிவுகளை ஆழ்ந்து படித்து
கருத்திடுவோர்களில் நீங்கள் முக்கியமானவர்.
நண்பர் வரோதயன் எனக்கு கொடுத்த பெரும் சந்தர்பம் இது சகோதரா..
அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் எனக்கு நாள் முழுக்க பேசவேண்டும்
என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது..
ஆனாலும் நேரமில்லை..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,
தங்களின் மென்மையான கருத்துரை எனக்கு
மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
இதற்கான சந்தர்பம் அமைத்துக்கொடுத்த நண்பர்
வரோதயனுக்கே இந்தப் பெருமை சாரும்...

மகேந்திரன் said...

வணக்கம் யோகா ஐயா,

நண்பர் வரோதயனின் ஆழ்ந்த கருத்துள்ள வினாக்களுக்கு
நான் என்னுள்ளிருந்து அளித்த விடைகளுக்கு இங்கு கிடைத்த
ஆஸ்கார் விருது உங்கள் கருத்துரை.

என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா.

மகேந்திரன் said...

வணக்கம் நண்பர் மணி,
கேட்கப்படும் கேள்விகளின் தன்மைதானே
நம்மை பேச வைக்கிறது.
அந்த வகையில் நண்பர் வரோதயனுக்கே
இந்தப் பெருமை எல்லாம் சேரும்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வரோதயன்,
அபுதாபி விமான நிலையத்திலேயே
உங்கள் பதிவு வெளியான அதே தருணத்திலேயே
படித்து விட்டேன் பதிவை...
பதிவுலகின் என் அன்பு உறவுகளுக்கு என் உள்ளத்தை வெளிப்படுத்த
ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்காக உங்களுக்கு
என் நன்றிகள்.

என் மீதான நம்பிக்கைக்கும் எண்ணங்களுக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் அம்பலத்தார் ஐயா,

கேட்கப்பட்ட வினாக்கள்
என்னைப்பேசவைத்தன.

தூக்குத்து தண்டனை கொடுப்பதில் எனக்கும்
விருப்பமில்லை தான் ஐயா. ஒரு உயிரின் மதிப்பு
அவ்வளவு தானா என்ற எண்ணம் எனக்கும் எப்போதும் உண்டு.
கடந்த ஒருவருட காலமாக கொள்ளைச் சம்பவங்கள்
புற்றீசல் போல அழிக்க முடியாத சக்தியாக
வளர்ந்துவருகிறது. . சிறு பொருளுக்காக கழுத்தறுத்து கொலைசெய்து
பொருளை சூறையாடிச் செல்பவர் மீது நமக்கு எதற்கு
அனுதாபம் என்பது என் தனிப்பட்ட கருத்து ஐயா.

இந்தக்கவிதை (காதல்கவிதை) என்னுடைய கல்லூரிப்பருவத்தில் எழுதியது ஐயா.
அதற்கு முன்னர் நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறேன் ஆனால்
காதல் கவிதைகள் இல்லை....
பொதுவாக நாட்டுப்புறக் கவிதைகள்..

அதிலொன்று...

" கண்ணைப்பார்த்து சொக்கிவந்த
தங்கமே முத்தழகி
கண்ணுக்கெட்டும் தூரம் வரை
குங்குமப் பொட்டழகி ........

இப்படி தொடங்கும் ஒரு பாடல்
ஒரு ஏழை விவசாயி ஒருவன் படும்
இன்னல்களை எழுதி இருந்தேன்

ஐயா..
பெருந்தலைவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லை..
அவர் இறந்த வருடத்தில் அதே மாதத்தில் பிறந்ததால்
அவரைப் பற்றி படிக்கும் போதெல்லாம்..
எனக்குள் ஊற்றெடுக்கு உணர்விது..

என் தகப்பனார் பற்றி இங்கே சொல்ல ஆயிரம் இருக்கிறது ஐயா..
என் அடுத்த பதிவுகளில் ஒரு குணாதிசயம் மூலமாக அதைத்
தெரிவிக்கிறேன்.

மகேந்திரன் said...

வணக்கம் சகோதர் நேசன்,
தங்களின் மலையகத்தில் முகம் தொலைத்தவன்
எனக்குப்பிடித்த பதிவுலகத் தொடர்களில் ஒன்று..
உங்களின் எழுத்து நடை அபாரமானது..
அதில் வரும் சம்பவங்கள் என்னை கவி படைக்க
தூண்டும்.

இங்கு நண்பர் கேட்ட சமூக கேள்விகள் எல்லாம்
நிறைய பேசத் தூண்டுபவை..
ஆனால் நேரம் போதாமையால் என்னால் நீண்ட பதில்
கொடுக்கமுடியவில்லை.

என் மனதில் இருந்ததை வெளிக்கொணர கேள்விகள்
புனைந்த நண்பர் வரோதயனுக்கு தான் இந்த பெருமைகள் எல்லாம்
சேரும்.

மகேந்திரன் said...

அன்புசகோதரி இராஜராஜேஸ்வரி..

கவிச் சக்கரவர்த்தியின் பாடலை
இங்கே உவமைப்படுத்தியதற்கு நன்றிகள்
சகோதரி.

மகேந்திரன் said...

வணக்கம் நித்திலம்-சிப்பிக்குள் முத்து அவர்களே,
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்,

தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,

கவிதைகளை மயிலிறகாகவும்
பனஞ்சவுக்காகவும் புனைவதில் வல்லவர் நீங்கள்..
உங்களுக்கு பிடித்த்த பதிவர் என்பதில்
எனக்கு மிகவும் ஆனந்தம்.

மகேந்திரன் said...

மதிப்பிற்குரிய புலவர்ப் பெருந்தகையே,

என்ன பேறு பெற்றேன்.
சங்கத் தமிழ்த் தாயின்
தவப்புதல்வனுக்கு தம்பி ஆவதில் எனக்கு
மிகுந்த மகிழ்ச்சி ஐயா.

பி.அமல்ராஜ் said...

முதலில் மேலே காட்டான் மாம்ஸ் சொன்னதுபோல, பதிவுலகில் தவிர்க்கமுடியாத ஒரு ஆளுமையை இந்தவாரம் அழைத்துவந்தமைக்கு மிக்க நன்றிகள். என்னைப்போன்ற கவிதைப் பதிவர்களை அதிகம் தேடிவந்து கருத்திட்டு உற்சாகப்படுத்துபவர்களில் முதலில் நிற்பவர் மகேந்திரன் அண்ணா.. நான் பதிவுலகில் வந்ததில் இருந்து இன்றுவரை அதிக தடவைகள் சென்றுவந்த வலைப்பூக்களில் வசந்தமண்டபம் குறிப்பிடத்தக்கது. பதில்கள் அனைத்திலும் ஒரு படைப்பிலக்கிய முதிர்ச்சி தெரிகிறது.. இருவரிற்கும் எனது வாழ்த்துக்கள்.

சசிகலா said...

அண்ணா என்று உரிமையுடன் அழைத்த போதும் தங்களைப் பற்றி முழுமையாய் அறிந்து கொள்ள தற்போதே சந்தர்ப்பம் கிடைத்தது . ஒவ்வொரு கேள்வியும் அதற்கே உரிய பதிலும் அண்ணா இப்படி பதில் அளிக்கவும் உங்களால் மட்டுமே முடியும் . பதிவுலகிற்கு எனை அறிமுகம் செய்து வைத்தது முதல் தொடர்ந்து வழிநடத்தவும் செய்கிறீர்கள் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா .

ரெவெரி said...

அன்பு சகோதரர் மகேந்திரனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி வரோ...

அவரது பதில்களில் எட்டாவது எனக்கும் தெம்பூட்டும் ஒன்று....இருக்கும் அப்பாவை இன்னும் போற்றத்தூண்டும் பதில்...

வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்...

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்களுக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அமல்ராஜ்
என்னுடைய வலைச்சரப்பணி சமயம் தான் தங்களின்
வலைத்தளத்தை முதன்முதலாகப் பார்த்தேன்..
அன்றே உங்களை அங்கே அறிமுகம் செய்தேன்..
தங்களின் பதிவுகளில் இருக்கும் காத்திரம்
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..
மனதில் பட்டதை அப்படியே சட்டென்று கவிதையில்
தருவதில் நீங்கள் வல்லவர் என்பதில் எனக்கு
மிகுந்த நன்பிக்கை உண்டு...
எங்கெங்கு நான் சென்றிடினும் என்னைத் தொடர்ந்து
வந்து கருத்துரைக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை சசிகலா,
பதிவுலகில் எனக்கு நிறைய தங்கைகள்
இருந்தாலும் என் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து
பேசிய முதல் பதிவுலக தங்கை நீங்கள் தான்.
உங்களுக்குள் ஒரு தெளிவான கவிதாயினி இருக்கிறார்
என்பதை ஒரு சிறிய கவிதையிலேயே பார்த்தேன்.

குறுகிய காலத்தில் இருபெரும் விருதுகள் பெரும் அளவுக்கு
அதிகப்படியான பதிவர்களின் நெஞ்சில் கவியால்
காவியம் எழுதியவர் நீங்கள்..

இன்னும் கவியுலகில் பெரும் புகழ் பெற்றிட
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சசிகலா said...

தங்களின் அன்பும் ஆசிர்வாதமும் இருக்கும் வரையில் எல்லாம் சாத்தியமே அண்ணா .

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
தங்களின் வாழ்த்துக்களுக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

சாகம்பரி said...

சில பதில்கள் எனக்கு ஒப்புமை இல்லாததாக இருந்தாலும், அவற்றில் வெளிப்படும் குணாதிசயங்கள் சகோ.மகேந்திரனுக்கான வரைகோட்டில் எளிதாக பொருந்துகின்றன. ஒரு நல்ல பர்சனாலிட்டிக்குரிய கேள்விகள் இன்னும் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் சகோ.

பகிர்விற்கு நன்றி திரு.வரோ.

சந்திரகௌரி said...

முதலில் எழுதிய கவிதையே இப்படி சிறப்பாக இருக்கிறதே. தந்தை மேல் வைத்த உங்கள் பாசம் வரிகளில் விரிவாகத் தெரிகின்றது . முழுவதும் பார்த்தேன். மகேந்திரன் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. அவர் எழுத்துக்களே அவரை எடுத்துக்காட்டும் . நல்ல மனிதர் என்பது நிச்சயம். நல்ல எழுத்து என்பதும் நிச்சயம் . தொடரட்டும் வாழ்த்துக்கள்