Pages

Sunday, February 26, 2012

மீண்டும் “பலதும் பத்தும்” பதிவர் நேர்காணல் + பாயாசம்


அச்சு ஊடகங்களில் வெளிவரும் சிறுகதைகளுக்கு எவ்வளவு மதிப்பு இருந்ததோ அதை விட ஒரு படி அதிகமாக அதில் வெளிவரும் தொடர்கதைகளுக்கு இருந்தது. பிரபல நாவலாசிரியர்கள் சாண்டில்யன், கல்கி ஆகியோரது நாவல்கள் பலவும் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் தொடராக வந்தவை தான். வாரா வாரம் வெளிவந்த இந்த தொடர்களைப் பத்திரப்படுத்தி ‘பைன்ட்’ செய்து பல நூலகங்களில் புத்தகமாக வைத்திருப்பதை நான் அவதானித்திருக்கின்றேன்.
இன்றெல்லாம் குமுதம், குங்குமம் போன்ற ஏ-5 அளவு கொண்ட சஞ்சிகைகளில் கூட ‘ஒரு பக்கக் கதைகள்’ பிரபல்யம் பெற்றதால் சிறுகதைகளின் நிலை கேள்விக் குறியாகிவிட்டது. இந்நிலையில் அவசரமான இந்த உலகத்தில் தொடர்கதைகளுக்கு யார் தான் முக்கியம் கொடுக்க விரும்புவார்கள்?

அச்சுப்பக்கத்திற்கே அந்தக்கதி எனில் இணைய உலகில் தொடர்களுக்கு எவ்வாறான மதிப்புக் கிடைக்கும்? நான் கூட சில தொடர்களை ஆரம்பித்து விட்டேன். அண்மைக்காலமாக சில பதிவர்களும் இப்படியான தொடர்பதிவுகளை எழு(தினார்கள்)துகிறார்கள். இதில் இரண்டு வகையுண்டு. நான் சங்கிலியன் தொடர் எழுதுவதைப் போல ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட பாகங்களாக வெளிவரும் தொடர்கள் ஒன்று, மற்றையது பொதுவான தலைப்பின் கீழ் பாகங்கள் தொடர்புபடாத தொடர்கள்.

இதில் வகை முதல் தொடருக்கு வாசகர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருக்கும். தொடரை ஆரம்பத்தில் இருந்து படிப்பவர்கள் கூட இடையில் ஒரு பகுதியை தவற விட்டால் ஏனைய பகுதிகளைக் படிக்க மாட்டார்கள். இரண்டாவது வகைத் தொடருக்கு எப்படியும் வாசகர்கள் 5 : 3 என்ற விகிதத்தில் ஆவது வாசகர்கள் வருவார்கள்.

‘பாயாசம்’ என்ற தொடர் பதிவை வாராவாரம் எழுதி வந்தேன். அதேபோல சங்கிலியன் தொடரையும் எழுதினேன். சில காலங்களின் பின் ‘பலதும் பத்தும்’ என்ற தொடர் பதிவை எழுதினேன். சம காலத்தில் ‘இடம்பெயர் கால நினைவுகள்’ தொடரையும் எழுதினேன். இவையனைத்தையும் தொடர்ந்திருந்தால் வாரத்தில் நான்கு நாட்கள் தொடருக்கே போய்விடும். தவிர, நான்கு தொடர் பதிவுகளையும் வாரா வாரம் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக அதிகளவான நேரத்தை நான் பதிவுலகுடன் செலவிட வேண்டி ஏற்படும். அதனால் இரண்டு தொடர்பதிவுகளை நிறுத்தி மற்றைய இரண்டு தொடர்பதிவுகளை மட்டும் எழுதி வந்தேன்.

தற்போது ‘இடம்பெயர் கால நினைவுகள்’ தொடர் நிறைவுக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு மாதமளவில் ‘சங்கிலியன்’ தொடரும் நிறைவுக்கு வந்து விடும். அதனால் நிறுத்தி வைத்திருந்த ஏனைய இரண்டு தொடர்களையும் மீண்டும் ஆரம்பிக்கப் போகின்றேன்.

பலதும் பத்தும் இந்த வாரப்பதிவர்

பதிவுலகில் ‘ஆக்டிவ்’ ஆக இருக்கும் தமிழ்ப் பதிவர்களிடம் வாரம் ஒருவராக 10 வினாக்களைக் கேட்டு (முக்கியமாக பதிவுலகம் சாராத) அவர்களின் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். பதிவுகளால் மட்டும் சந்தித்துக் கொள்ளும் பதிவர்கள் பற்றி கொஞ்சம் மேலதிகமாக ஏனைய பதிவர்களும் தெரிந்து கொள்வதற்கு இது ஏதுவாக அமைந்தது. நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ளலாம். எனக்கு அந்தளவு ஹிட்ஸ்கள் கிடைத்தன. நிறுத்தப்பட்ட அந்தத் தொடரை மீண்டும் ஆரம்பிக்க சொல்லி பல பதிவுலக நண்பர்கள் கேட்டுக்கொண்டாலும் என்னால் ஆரம்பிக்க முடியாத நிலை இருந்தது. தற்போது மீண்டும் அந்த மகிழ்ச்சியான சூழல் உருவாகியிருப்பதால் பதிவர் நேர்காணல் தொடரப்போகின்றது.

மூன்று மாதங்களாக வெற்றிகரமாக வெளிவந்த அத்தொடர் பதிவை அலங்கரித்த பதிவர்களைப் பற்றி அறியாதவர்கள் கீழே கிளிக் அறிந்து கொள்ளுங்கள்..


பலதும் பத்தும் - இந்த வாரம் பதிவர் மருதமூரான்
பலதும் பத்தும் - இந்த வாரம் மைந்தன் சிவா
பலதும் பத்தும் - இந்தவாரம் N.K.அசோக்பரன்
பலதும் பத்தும் - இந்த வாரம் பதிவர் ஜனா
பலதும் பத்தும் - இந்தவாரம் பதிவர் கந்தசாமி
பலதும் பத்தும் - இந்தவாரம் பதிவர் செங்கோவி
பலதும் பத்தும் - இந்தவாரம் பதிவர் நிரூபன்
பலதும் பத்தும் - இந்த வாரம் பதிவர் தமிழ்வாசி பிரகாஸ்
பலதும் பத்தும் - இந்தவாரம் பதிவர் துஸ்யந்தன்
பலதும் பத்தும் - இந்தவாரம் பதிவர் டிலீப்


பாயாசம்

சினிமா, அரசியல், விளையாட்டு, இசை என பல்வேறுபட்ட அம்சங்களையும் ஒரே பதிவில் உள்ளடக்கி பாயாசம் எனும் தொடர்பதிவூடாக வழங்கி வந்தேன். நிச்சயம் இது கேபிள்சங்கரின் ‘கொத்துபரோட்டா’ போலவும், ஜாக்கிசேகரின் ‘சாண்ட் வெஜ் அன்டு நான் வெஜ்’ போலவும் தான். பதிவுலகில் அவர்கள் முன்னோடிகள் அவர்களைப் ‘பாலோ’ செய்வதில் தப்பில்லை.

நாங்கள் பல விடயங்களைப் பதிவுகளாக சொல்ல நினைப்போம், ஆனால் அதைப் தனிப்பதிவாக எழுதும் அளவிற்கு அதில் விடயங்கள் இருக்காது. தேவையில்லாமல் ஜவ்வு மாதிரி இழுத்து சொல்ல வந்த விடயத்தையே உருக்குலைத்து விடுவோம். இந்த மாதிரியான இடத்தில் ‘பாயாசம்’ போன்ற பதிவொன்று அவசியமாகின்றது. இதற்கு வாசகர் எண்ணிக்கையும் கணிசமாக கிடைக்கும் (கிடைத்திருக்கின்றது)

எனவே இந்த இரண்டு தொடர் பதிவுக்கும் வழமைபோல எனக்கு அளித்து வரும் ஆதரவை நல்குவீர்கள் என்ற நினைப்புடன் மீண்டும் அவற்றை ஆரம்பிக்கின்றேன்.

Post Comment

34 comments:

மகேந்திரன் said...

வணக்கம் நண்பர் வரோதயன்,
பலதும் பத்தும் தொடரட்டும்
இனிக்கும் பாயாசமாக..
எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு..

துஷ்யந்தன் said...

எல்லாம் சரிதான் கடைசில் ஏன் திரிஷா அன்ரியின் போட்டோ??? அவ்வ......

துஷ்யந்தன் said...

அண்ணே... அண்ணே.... பேட்டி எடுத்தவங்கள மறுபடியும் எடுப்பீங்களா???? அவ்வவ்.....

நானும் இன்னும் ரெண்டு பெற திட்ட பாக்கி இருக்கு உங்க பெட்டு மூலமா திட்டலாம் இல்ல...... ஹீ ஹீ........

துஷ்யந்தன் said...

பலதும் பத்தும் எனக்கும் ரெம்ப புடிச்ச தொடர்...... பதிவர்கள் பற்றி அறிய ரெம்ப உதவியது அண்ட் சுவராசியமாகவும் இருந்தது.... அது தொடர்வதில் ஹப்பி பாஸ்...
சும்மா கலக்குங்க :)

துஷ்யந்தன் said...

என்னலே.... என் கருத்தில் இவ்ளோ எழுத்து பிழை வருது :( கொஞ்ச நாள் பதிவுகள் போடாம இருந்ததும் தமிழ் மறந்துட்டேனோ...... அவ்வவ்...

தனிமரம் said...

வணக்கம் பாஸ் .
தொடர் பலவிடயங்கள் சொல்லும். ஆனால் ஹிட்ச் மெனியா ஒருத்தனை பாதை மாறவிடக்குடாது.உங்களீடம் இதுதான் வேண்டுவது / ஏழுத்துப்பிழை வருவது அவசர
உலகில் சகயம் ஏன் தானோ புரியுது இல்லை*

கோகுல் said...

உங்கள் கேள்விக்கணைகளுக்கு நமது பதிவுலக நண்பர்களின் "பதில்" தாக்குதல் தொடரட்டும்.ஆவலாய் காத்திருக்கிறேன்.

தனிமரம் said...

இந்த மட்டுறூத்தால் கூட பலர் வலைப்பக்கம். வர விடாது பாஸ்.இது சிலருக்கு புரியுது இல்லை[தனிமரத்திற்கு[

கோகுல் said...

பாயாசம் பற்றி எனது கருத்தும் உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறது.சில பதிவுகளை நீளம் கருத்தி தேவையில்லாமல் இழுத்துக்கொண்டு வருவோம்.
நானும்கொஞ்ச நாளைக்கு முன் பலசரக்கு கடை
http://gokulmanathil.blogspot.in/2012/01/blog-post_14.html
என்ற பெயரில் இது போன்ற பல அம்சங்கள் அடங்கிய பதிவுகளை ஆரம்பித்திருக்கிறேன்.இரண்டு எழுதியுள்ளேன்.இனி வாரம் ஒன்று எழுதலாம் என இருக்கிறேன்.

உங்கள் பாயாசம் தொடர்ந்து வரவிருப்பது மகிழ்ச்சி.

ஹேமா said...

பாயாசம்....எல்லாம் அளவோட சேர்த்து சுவையாய் இருந்தால் நிச்சயம் சுவைக்கலாம் வரோ !

ஹேமா said...

துஷியா...என்ன புலம்பல்.ஓடிப்போய் ஒரு பதிவு போடுங்கோ !

சி.பி.செந்தில்குமார் said...

பாயசம் இனிக்கட்டும். பலதும் பத்தும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

KANA VARO said...

மகேந்திரன் said...
வணக்கம் நண்பர் வரோதயன்,
பலதும் பத்தும் தொடரட்டும்
இனிக்கும் பாயாசமாக..
எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு..//

நன்றி அண்ணா

KANA VARO said...

துஷ்யந்தன் said...
எல்லாம் சரிதான் கடைசில் ஏன் திரிஷா அன்ரியின் போட்டோ??? அவ்வ......//

உன்னைப்போல யாரும் காய்ஞ்சு போய் வருவங்கள். அதுக்குத்தான்டா..

KANA VARO said...

துஷ்யந்தன் said...
அண்ணே... அண்ணே.... பேட்டி எடுத்தவங்கள மறுபடியும் எடுப்பீங்களா???? அவ்வவ்.....

நானும் இன்னும் ரெண்டு பெற திட்ட பாக்கி இருக்கு உங்க பெட்டு மூலமா திட்டலாம் இல்ல...... ஹீ ஹீ........//

உன்னை மட்டும் திருப்ப பேட்டி எடுக்கிறன்டா. நீ பெரிய மகா புருசன் தானே!

KANA VARO said...

துஷ்யந்தன் said...
பலதும் பத்தும் எனக்கும் ரெம்ப புடிச்ச தொடர்...... பதிவர்கள் பற்றி அறிய ரெம்ப உதவியது அண்ட் சுவராசியமாகவும் இருந்தது.... அது தொடர்வதில் ஹப்பி பாஸ்...
சும்மா கலக்குங்க :)//

நன்றி நன்றி. (இவனுக்கெல்லாம் நன்றி சொல்லி என் டயத்தை வேஸ்ட் ஆக்க வேண்டியிருக்கு)

KANA VARO said...

துஷ்யந்தன் said...
என்னலே.... என் கருத்தில் இவ்ளோ எழுத்து பிழை வருது :( கொஞ்ச நாள் பதிவுகள் போடாம இருந்ததும் தமிழ் மறந்துட்டேனோ...... அவ்வவ்...//

எல்லாம் மப்புத்தான். (பகல்ல தண்ணியடிக்காதை எண்டு சொன்னா கேட்டத்தானே!)

KANA VARO said...

தனிமரம் said...
வணக்கம் பாஸ் .
தொடர் பலவிடயங்கள் சொல்லும். ஆனால் ஹிட்ச் மெனியா ஒருத்தனை பாதை மாறவிடக்குடாது.உங்களீடம் இதுதான் வேண்டுவது / ஏழுத்துப்பிழை வருவது அவசர
உலகில் சகயம் ஏன் தானோ புரியுது இல்லை*//

ஹிட்சுக்காக எழுதுவதானால் எவ்வளவே விசயங்களை நான் எழுதாமலே விட்டிருப்பேன்.
ஆனாலும் கடைக்கு ஆட்கள் வருவதைத் தானே முதலாளி விரும்புவான். எனவே வாசகரைக் கொண்டுவருவதற்கு சில விடயங்கள் அவசியம். ஆனால் கட்டாயமல்ல..

KANA VARO said...

கோகுல் said...
உங்கள் கேள்விக்கணைகளுக்கு நமது பதிவுலக நண்பர்களின் "பதில்" தாக்குதல் தொடரட்டும்.ஆவலாய் காத்திருக்கிறேன்.//

ஹா ஹா என் மூஞ்சில குத்து விழாமல் பார்க்கணும்.

KANA VARO said...

தனிமரம் said...
இந்த மட்டுறூத்தால் கூட பலர் வலைப்பக்கம். வர விடாது பாஸ்.இது சிலருக்கு புரியுது இல்லை[தனிமரத்திற்கு[//

சில நேரங்களில தேவைப்படுது ப்ரதர் என்ன செய்ய..

KANA VARO said...

கோகுல் said...
பாயாசம் பற்றி எனது கருத்தும் உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறது.சில பதிவுகளை நீளம் கருத்தி தேவையில்லாமல் இழுத்துக்கொண்டு வருவோம்.
நானும்கொஞ்ச நாளைக்கு முன் பலசரக்கு கடை
http://gokulmanathil.blogspot.in/2012/01/blog-post_14.html
என்ற பெயரில் இது போன்ற பல அம்சங்கள் அடங்கிய பதிவுகளை ஆரம்பித்திருக்கிறேன்.இரண்டு எழுதியுள்ளேன்.இனி வாரம் ஒன்று எழுதலாம் என இருக்கிறேன்.

உங்கள் பாயாசம் தொடர்ந்து வரவிருப்பது மகிழ்ச்சி.//

சந்தோசம் ப்ரதர் தொடர்ந்து எழுதுங்கோ!

காட்டான் said...

வணக்கம் வரோ!
இப்பிடியான பாயாச பதிவுகள் எனக்கும் பிடிக்கும் தொடருங்கள்.!!

KANA VARO said...

ஹேமா said...
பாயாசம்....எல்லாம் அளவோட சேர்த்து சுவையாய் இருந்தால் நிச்சயம் சுவைக்கலாம் வரோ !//

உங்க ரசனைக்கு தீனி போடுற மாதிரி பாயாசம் தயார் பண்ணினால் போச்சு..

KANA VARO said...

ஹேமா said...
துஷியா...என்ன புலம்பல்.ஓடிப்போய் ஒரு பதிவு போடுங்கோ !//

அவர் மூன்றாவது பிகருக்கு ட்ரைய் பண்ணிட்டு இருக்கார். டிர்ஸ்ராப் பண்ண வேணாம்.

KANA VARO said...

சி.பி.செந்தில்குமார் said...
பாயசம் இனிக்கட்டும். பலதும் பத்தும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.//

அண்ணருக்கு நன்றிகள்

KANA VARO said...

Rathnavel Natarajan said...
வாழ்த்துகள்.//

நன்றிகள்

KANA VARO said...

காட்டான் said...
வணக்கம் வரோ!
இப்பிடியான பாயாச பதிவுகள் எனக்கும் பிடிக்கும் தொடருங்கள்.!!//

மாம்ஸ் இற்கே பிடிச்சுப்போச்சு. பிறகென்ன ஜமாய்ச்சிட வேண்டியது தான்..

Yoga.S.FR said...

பாயாசம்: அடுப்பு பத்த வச்சு,பாத்திரத்தில தண்ணி வச்சு,அடுப்பில வச்சு தண்ணி நல்லா கொதிக்க விடவேணும்!கஜூ,பிளம்ப்ஸ் போட வேணும்.மெல்லிசா தாச்சி சட்டியில சவ்வரிசி(ஜவ்வரிசி?)சூடாக்கி வச்சிருக்கவேணும்!தண்ணி கொதிச்சாப் பிறகு சவ்வரிசியை போட வேணும்!கிளறிக்கொண்டே நிக்க வேணும்.லைட்டா சவ்வரிசி அவிஞ்சு வரேக்கை,சீனி அளவாப் போடவேணும்.கிளறிக்கொண்டே இருக்கவேணும்.கொஞ்சநேரம் கழிச்சு டின்பால் அளவா விடவேணும்.ஒரு கொதி கொதிச்சு வர,சேமியா,கொஞ்சமா ஏலக்காய் போட்டு இறக்கிவிடோணும்!பாயாசம் தயார்!!!!!!!!!!

காட்டான் said...

அண்ண ஒரு முடிவோடுதான் கிளம்பீட்டிங்க போல.? :-)

Yoga.S.FR said...

வணக்கம் காட்டான்!நேற்று கொஞ்சம் வெளியே சென்றதால் பார்க்கவில்லை!////காட்டான் said...

அண்ண ஒரு முடிவோடுதான் கிளம்பீட்டிங்க போல.? :-)////ஏன்,பாயாசம் செய்யிற முறையில ஏதும் புழையோ????(சும்மா ஜாலியா எழுதிப் பாப்பமெண்டுதான்,ஹி!ஹி!ஹி!!!!!)

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

வெயிட்டிங்க் ஃபோர் பாயாசம்! ப்ளாக்கர் பேட்ட்டீஸ் ஆல்சோ வில் பீ நைஸ்!

( லண்டனில இருக்கிறார்! அதான் இங்கிலீசில போட்டேன் )

அம்பலத்தார் said...

பாயாசத்துடன் விருந்து சுவைக்க ரெடியாயிட்டேன்.

அம்பலத்தார் said...

வாழ்த்துக்கள், அசத்துவது என்ற முடிவோடதான் இருக்கிறியள்போல