Pages

Monday, February 13, 2012

காதலே போ போ! சாதலே போ போ!


“பாட்டுத் தெரியாதவன் எல்லாம் பதிவெழுத வந்திட்டான்” என நினைக்கிறீங்களா? அப்பிடியெல்லாம் இல்லீங்க. காதல்ல தோற்றா சாதல் தான் முடிவா? மனுசரா பிறந்த நாம இப்பூவுலகில செய்யுறத்துக்கு எவ்வளவோ விசயங்கள் இருக்கு, அனுபவிக்கிறதுக்கு எவ்வளவோ விசயங்கள் இருக்கு. அதையெல்லாம் விடுத்து “எங்களைப் புரிந்து கொள்ளாத அந்த எவனோ அல்லது எவளுக்காகவோ” வாழ்க்கையை மாய்த்துக் கொள்வதென்பது எவ்வளவு முட்டாள் தனம். “திடீரென இப்பிடி ஒரு பதிவு வருதே! வரோக்கு ஏதும் ஆச்சோ?” என நினைத்து கன்பியூஸ் ஆகாதீங்க. பெப்ரவரி 14, காதலர் மாதத்தில் ஏதோ நமக்கு தோணுற நாலு விசயத்தை உங்களோட பகிர்ந்துக்கலாம் என நினைச்சன்.
“காதல்” இது உலகையே மாற்றக்கூடியது. அவரவர் தாமாக உணர்ந்து அனுபவிக்கும் ஒரு விடயத்துக்கு வரைவிலக்கணம் எல்லாம் எதற்கு? இது இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டது. இரு மனங்களுடன் சம்பந்தப்பட்டது. காதல் வந்தாலே கவிதை வரும், கூடவே நிறைய தத்துவங்கள் வரும். எல்லாவற்றுக்கும் மேலாக தலையிடி நல்லாவே வரும்! அனைவருக்கும் பொதுவான ஏற்றுக்கொள்ளக்கூடிய தத்துவம் “காதல் : வெளியே இருக்கிறவனுக்கு உள்ளே போகணும் போல இருக்கும், உள்ளே இருக்கிறவனுக்கு வெளியே வரணும் போல இருக்கும்”. இதை காதலித்த ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பார்கள். உணராதவர்கள் உணருவார்கள். ஏன்னா பட்டுத்தெளிஞ்சா தானே புத்தி வரும். நாம அட்வைஸ் பண்ணினால் “பொறாமையில சொல்லுறான்” என நினைப்பாங்க.

“காதலிப்பது எப்படி?” அப்படீன்னு கிளாஸ் எல்லாம் எடுக்கல. எப்பிடியோ காதலிச்சிட்டீங்க. அது கிடக்கட்டும் கழுதை. சரி, இனி என்ன செய்யலாம். எல்லோரும் காதலிக்கிறவனை(ளை) கல்யாணம் செய்யணும் எண்டு தானே ஆசைப்படுவீங்க. என்னாது அப்பிடியில்லையா? மூதேவி நீ கீழ படியாதை. போய் எதுக்கு லவ் பண்ணித் தொலைச்சியோ அந்த வேலையைப்பார் எருமை! சின்சியரா லவ் பண்ணுற பார்ட்டிங்க மேல படிங்க.

காதலர்கள் விடும் தவறுகளிலை முக்கியமானது ஒழிச்சு மறைக்கிறது. எப்பவும் உங்க பார்ட்டனர் எந்தவித ஒழிவு மறைவும் இல்லாமல் நீங்க இருக்கணும் எங்கிறதை தான் விரும்புவாங்க. எதையும் ஓப்பனா கதையுங்க. அதுக்கு பிறகும் புரிஞ்சு கொள்ளாம சண்டை பிடிச்சா அதுக்கு உங்க மேல தப்பு இல்ல. லூஸ்ல விடுங்க. தொடர்ந்து காதலிக்க பிடிச்சா பிடிக்கட்டும். இல்லாட்டி விடட்டும். நீங்க மறைக்கிற விசயத்தில பலதையும் பயத்திலை தான் மறைப்பீங்க. பார்ட்டனர் என்ன நினைப்பாரோ என்ற சந்தேகம் எப்பவும் உங்க கிட்ட இருந்திட்டே இருக்கும். அதையெல்லாம் தூக்கிப்போடுங்க.

காதல்கள் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை. பல்வேறு சூழ்நிலைகளால் காதலர்கள் பிரிகிறார்கள். டைம் பாஸ்ஸிற்கு லவ் பண்ணுபவர்களும், ஒரு காதலி / காதலன் தேவை என லவ் பண்ணுபவர்களுக்கும் பிரச்சனையே இல்லை. உண்மைக்காதல் பிரிவுகளின் போது வலிக்கத் தான் செய்யும். காதலர்களில் ஒருவர் அந்த காதலைப்பிரிப்பார். அல்லது இருவரையும் வேறு ஒரு சக்தி பிரிக்கும். யாராவது ஒருவர் பிரிந்தால் வலி மற்றவருக்கு மட்டுமே! இருவரையும் பிரித்தால் இருவருக்கும் வலிக்கும்.

உங்கள் பார்ட்டனர் உங்களைப் பிரிந்து சென்றால், நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். நீங்கள் உயிரென மதித்த அவரே உங்களை விட்டு செல்லும் பொழுது அவருக்காக ஏன் உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ளவேண்டும். பிரிந்து சென்றவரைப் பழிவாங்குவதற்காக மறுநாளே நீங்கள் இன்னொருவரைக் காதலித்தால் பிரிந்தவரை விட நீங்கள் தான் மிகப்பெரிய குற்றவாளி. உங்கள் பாட்டில் தொடர்ந்து வாழ்க்கையை திறம்படக் கொண்டு செல்லுங்கள். சில நாட்கள் வலிக்கும். பிறகு மறந்து விடுவீர்கள். உங்கள் உறவினர்கள், நண்பர்கள், தொழில் என கவனம் செலுத்தினால் வலி இலேசாகிவிடும். காதலுக்காக சாவதென்பது மிகவும் முட்டாள் தனமானது. அதுவும் உங்களை புரிந்து கொள்ளாமல் சென்றவருக்காக சாவதென்பது மிகவும் கேவலமானது. அந்த கேவலத்தை ஒருநாளும் உங்கள் வாழ்க்கையில் செய்யாதீர்கள்.

காதலர்களை அவர்களின் விருப்பமின்றி வேறு சூழ்நிலைகள் பிரித்தால் கொஞ்சம் நிதானமாக என்ன செய்யலாம் என சிந்தியுங்கள். மீண்டும் இருவரும் சேர்வதற்கான வழிவகைகள் என்னவென ஆராயுங்கள். சேர்வதென்பது முடியாதகாரியமானல் விட்டு விடுவதை தவிர வேறு வழியில்லை. “காதல்” பட க்ளைமாக்ஸ் போல ஒரு சம்பவம் உங்கள் காதலுக்கு நடந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? சினிமாவில் காட்டுவதைப் போல சண்டையிட்டெல்லாம் எங்கள் காதலில் வெற்றி பெற முடியாது. “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என நினைத்து மேற்கொண்டு உங்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்லுங்கள்.
ப்ரீ அட்வைஸ் கொடுக்கிறது ரொம்ப ஈஸி. அதை செயற்படுத்துறது தான் கஸ்டம் என நீங்க நினைக்கிறது புரியிறது. நான் சொன்ன விசயங்களை நானே பின்பற்றுவனோ என்பதே கேள்விக்குறி. என்னால இப்படியெல்லாம் இருக்க முடியிறதில்லை. மற்றவங்களாவது கொஞ்சம் உசாரோட இருக்கட்டும் என்கிற நினைப்பில தான் இதையெல்லாம் சொல்லியிருக்கன்.

“உண்மைக்காதல் என்றைக்குமே ஜெயிக்கும்” என சினிமா வசனத்தையே சொல்லுறன். அந்த உண்மைக்காதலை கண்டு பிடிக்கிறது எப்படி? எனக்குத் தெரிஞ்ச ஒரு சின்ன வழி, நீங்கள் ஒரு ஆண். உங்கள் காதலி அழகியோ அல்லது சுமாரான பார்ட்டியோ அல்லது சப்பை பிகரோ (நாங்க மதிப்பிடாட்டியும் மற்றவங்க மதிப்பிடுவாங்க தானே!). உங்க முன்னாடி ஒரு பேரழகி வந்து நிண்டாலும் உங்க மனசு அந்த பேரழகிக்கு இடம்கொடுக்காமல் உங்க காதலியை மட்டும் வைச்சிருந்தா உங்க காதல் உண்மைக்காதல். நாங்க எப்பேர்ப்பட்ட கில்லாடிங்க என்கிறது எங்க மனசுக்கு மட்டும் தானே தெரியும். அதனால அந்த மனசிடமே இந்த ஒப்பீட்டு பொறுப்பை ஒப்படைச்சிட்டன். எதைப் பேய்க்காட்டினாலும் உங்க மனச்சாட்சியை மட்டும் பேய்க்காட்டேலாது. நைட் கிளப் போகணும் போல இருக்கும், மசாஜ் சென்ரர் போகணும் போல இருக்கும் அல்லது பலானா இடத்துக்கு போகணும் போல இருக்கும். ஆம்பிளையா இருந்தா இந்த ஆசை எல்லாம் வரும்(வரணும்). அதையெல்லாம் கட்டுப்படுத்தி உங்க காதலியை மட்டுமே நினையுங்க. உங்களுக்கு நிச்சயம் வெற்றி தான்.

இதே முறையை பெண்களும் கையாளுங்க. உங்க மனச்சாட்சியிடமே கேள்வி கேளுங்க. உங்க காதலை தராசில்லாமல் நிறுத்துக் கொள்ளுங்க. அதை விடுத்து எப்பவுமே உங்களிடம் பிழையை வைத்துக் கொண்டு எதிர்த்தரப்பினர் சரியாக நடக்க வேண்டும் என நினைக்காதீர்கள்.

அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

Post Comment

26 comments:

தனிமரம் said...

அண்ணர் இன்று ஒரே அட்வைஸ் சொல்லி காதல் சிறப்பையே பதிவாக தந்திருக்கின்றார் .

தனிமரம் said...

கட்டுப்படுத்தி உங்க காதலியை மட்டுமே நினையுங்க. உங்களுக்கு நிச்சயம் வெற்றி தான்.// உண்மைதான் பாஸ் இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

தனிமரம் said...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என நினைத்து மேற்கொண்டு உங்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்லுங்கள்.//
உண்மையாக நேசிப்போர் இப்படி செய்வார்கள் பாஸ்!இச்சைக்காதல் வெறும் டூப்புத்தான்!

தனிமரம் said...

அடகாதலர் தினத்தின் முக்கிய பதிவில் எனக்குத்தான் பால் கோப்பியா ?பாரிஸில் குளிரில் வரோ தரும் கோப்பியை ரசித்துக் குடிக்க ஆவல் !

Yoga.S.FR said...

வணக்கம் வரோ!அருமையான அட்வைஸ்.ஆனா ஒண்ணு,தற்கொலை பண்ணிக்கிறதுக்கும் ஒரு தில்லு வேணும்!(சும்மா ஒரு விவாதத்துக்காக சொன்னேன்)மத்தப்படி,எழுதியிருக்கிறதெல்லாம் நூத்துக்கு நூறு சரி!(கண்ணதாசன் எப்புடி கவிஞர் ஆனார்,அருணகிரிநாதர் எப்புடி இறைவனுக்கு அடிமையானார் எங்கிறதெல்லாம் நல்லாவே புரியுது!)சரி,சரி காதலர் தின வாழ்த்துக்கள்!!!!!

Yoga.S.FR said...

தனிமரம் said...

அடகாதலர் தினத்தின் முக்கிய பதிவில் எனக்குத்தான் பால் கோப்பியா ?பாரிஸில் குளிரில் வரோ தரும் கோப்பியை ரசித்துக் குடிக்க ஆவல் !////இவருக்கொரு "பால்கோப்பி"அபிஷேகம் ஒழுங்கு பண்ணோணும்!

♔ம.தி.சுதா♔ said...

:)

நிரூபன் said...

வணக்கமுங்கோ சார்,

நீங்க ரொம்பத் தான் காதல் வயப்பட்டிருப்பீங்க போல இருக்கே!

காதல் பத்தி உளவியல் அட்வைஸில் சும்மா பிச்சு உதறியிருக்கிறீங்க.

எல்லா அட்வைசுகளையும் செயற்படுத்த ஆசை தான். ஆனால் அருகே காதலி இல்லையே! அப்படியே ஒரு காதலியையும் எப்பூடிப் புடிக்கிறது அப்படீன்னு ஒரு அட்வைசு கொடுங்க பாஸ்.

காட்டான் said...

அட இந்த காதல் தொல்லை தாங்க முடியலைப்பா..

காட்டான் said...

;-)

VIJI VISWALINGAM said...

காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

Yoga.S.FR said...

நிரூபன் said...

வணக்கமுங்கோ சார்,
ஒரு காதலியையும் எப்பூடிப் புடிக்கிறது அப்படீன்னு ஒரு அட்வைசு கொடுங்க பாஸ்.////பிறகு கூட்டிக்கொண்டு ஓடுறது எப்புடி?ரெஜிஸ்ரர் பாண்ணுறது எப்புடி?பிறகு,...........................எப்புடி?இப்புடியே........................?!

தனிமரம் said...

ஆவல் !////இவருக்கொரு "பால்கோப்பி"அபிஷேகம் ஒழுங்கு பண்ணோணும்!//கொலை மிரட்டல் என் முருகனிடம் சொல்வேன் ஹீ ஹீ

Nilaa said...

Enna maapila love puddukichchaa?

KANA VARO said...

தனிமரம் said...
அண்ணர் இன்று ஒரே அட்வைஸ் சொல்லி காதல் சிறப்பையே பதிவாக தந்திருக்கின்றார்//

லூசுத்தனமா காதலர்கள் பிரியக்கூடாது பாருங்க. அது தான்.

KANA VARO said...

தனிமரம் said...
கட்டுப்படுத்தி உங்க காதலியை மட்டுமே நினையுங்க. உங்களுக்கு நிச்சயம் வெற்றி தான்.// உண்மைதான் பாஸ் இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.//

புரிந்து கொண்டவன் வாழ்வு வெற்றி தான்

KANA VARO said...

தனிமரம் said...
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என நினைத்து மேற்கொண்டு உங்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்லுங்கள்.//
உண்மையாக நேசிப்போர் இப்படி செய்வார்கள் பாஸ்!இச்சைக்காதல் வெறும் டூப்புத்தான்!//

எல்லாத்துக்கும் ஒரு மனத்தைரியம் வேணும். மனம் ஒரு பயந்தான்கொள்ளி. என்ன செய்வது all is well

KANA VARO said...

தனிமரம் said...
அடகாதலர் தினத்தின் முக்கிய பதிவில் எனக்குத்தான் பால் கோப்பியா ?பாரிஸில் குளிரில் வரோ தரும் கோப்பியை ரசித்துக் குடிக்க ஆவல் !//

அண்ணர் ஆசைப்பட்டதுக்காக நெஸ்கபே தாரன்

KANA VARO said...

Yoga.S.FR said...
வணக்கம் வரோ!அருமையான அட்வைஸ்.ஆனா ஒண்ணு,தற்கொலை பண்ணிக்கிறதுக்கும் ஒரு தில்லு வேணும்!(சும்மா ஒரு விவாதத்துக்காக சொன்னேன்)மத்தப்படி,எழுதியிருக்கிறதெல்லாம் நூத்துக்கு நூறு சரி!(கண்ணதாசன் எப்புடி கவிஞர் ஆனார்,அருணகிரிநாதர் எப்புடி இறைவனுக்கு அடிமையானார் எங்கிறதெல்லாம் நல்லாவே புரியுது!)சரி,சரி காதலர் தின வாழ்த்துக்கள்!!!!!//

காதல் தோல்வி சாதிக்க தூண்ட வேண்டும். அப்படி சாதித்தவர்கள் நிறையப்பேர்

KANA VARO said...

Yoga.S.FR said...
தனிமரம் said...

அடகாதலர் தினத்தின் முக்கிய பதிவில் எனக்குத்தான் பால் கோப்பியா ?பாரிஸில் குளிரில் வரோ தரும் கோப்பியை ரசித்துக் குடிக்க ஆவல் !////இவருக்கொரு "பால்கோப்பி"அபிஷேகம் ஒழுங்கு பண்ணோணும்!//

பெரிய பால்குடிகாரன் போல

KANA VARO said...

♔ம.தி.சுதா♔ said...
:)//

பிசி போல

KANA VARO said...

நிரூபன் said...
வணக்கமுங்கோ சார்,

நீங்க ரொம்பத் தான் காதல் வயப்பட்டிருப்பீங்க போல இருக்கே!

காதல் பத்தி உளவியல் அட்வைஸில் சும்மா பிச்சு உதறியிருக்கிறீங்க.

எல்லா அட்வைசுகளையும் செயற்படுத்த ஆசை தான். ஆனால் அருகே காதலி இல்லையே! அப்படியே ஒரு காதலியையும் எப்பூடிப் புடிக்கிறது அப்படீன்னு ஒரு அட்வைசு கொடுங்க பாஸ்.//

இப்பிடி சொல்லிச்சொல்லியே சைலெண்டா காரியத்தை கொண்டு போங்க பாஸ்

KANA VARO said...

காட்டான் said...
அட இந்த காதல் தொல்லை தாங்க முடியலைப்பா..//

உங்களுக்குமா மாம்ஸ்

KANA VARO said...

VIJI VISWALINGAM said...
காதலர் தின நல்வாழ்த்துக்கள்.//

நீங்க தான் மறந்திட்டீங்க

KANA VARO said...

Yoga.S.FR said...
நிரூபன் said...

வணக்கமுங்கோ சார்,
ஒரு காதலியையும் எப்பூடிப் புடிக்கிறது அப்படீன்னு ஒரு அட்வைசு கொடுங்க பாஸ்.////பிறகு கூட்டிக்கொண்டு ஓடுறது எப்புடி?ரெஜிஸ்ரர் பாண்ணுறது எப்புடி?பிறகு,...........................எப்புடி?இப்புடியே........................?!//

அதானே! இவனுகளுக்கு இதே பொழைப்பா போச்சு

KANA VARO said...

Nilaa said...
Enna maapila love puddukichchaa?//

பதிவுக்கும் தனிமனிதர்களுக்கும் சம்பந்தம் இல்லப்பா..