Pages

Monday, February 6, 2012

என்னை ஏமாத்தின பிகருகளும், நான் ஏமாத்தின பிகருகளும்!


ஏம்பா! நான் தெரியாமல் தான் கேக்குறன். மனுசனுக்கு மட்டும் தானே ஆறறிவு இருக்கு. அதைத் தானே பகுத்தறிவு என்கிறோம். ”எது தேவை? எது தேவையில்லை, எது நல்லது? எது கெட்டது?” இப்பிடி எல்லாத்தையும் பிரிச்சு பார்த்து அறியிறதுக்கு தானே அந்த ஆறாவது அறிவை கடவுள் படைச்சான். அதே போல பதிவுகளிலையும் பிரிச்சு பார்க்க வேண்டாமோ?

வெறும் தலைப்பை பார்த்து உள்நுழைந்து ”பல்பு” வாங்குவோர் சங்கத்திற்காக இந்த இடுகைத் தலைப்பு தெரிவு செய்யபட்டது. ஹீ ஹீ, நம்மளை ஒரு பிகர் பார்க்கிறதே பெரிய விசயம். இதில இத்தனை பிகருகள் பார்த்திருக்குமா? போங்க தம்பி, போய் வேலையைப்பாருங்க..

ஆனாலும் ஒரு சின்ன ஏமாற்றம் பற்றித்தான் இந்தப்பதிவில சொல்லப்போறேன்.

இலங்கைத்தீவானது நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்டது. (அதனால தான் அதுக்கு தீவு எண்டு பேர் வைச்சிருக்காங்க என்கிறது எங்களுக்கும் தெரியும். நீ மேல சொல்லு) வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலை இருக்கிற எல்லோரும் நினைத்த மாத்திரத்திலேயே கடலைப்பார்க்கலாம். மத்திய பகுதியைச் சேர்ந்தவங்க கூட ஒரு ரெண்டு மூன்று மணித்தியால பயணத்திற்கு பிறகு கடலைப்பார்க்கலாம்.

பீச்ல நிண்டா அது பல கதை பேசும். எங்கள் கவலையை மறக்கடிக்கும். கடல் உப்புத் தண்ணியில் குளித்தால் உடம்பில் உள்ள பல வியாதிகள் தீரும் என மருத்துவர்கள் சொல்வார்கள். குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது உவர் நீரில் குளித்தால் நல்லது. யாழ்ப்பாணத்தில் இருந்தபோது ஒரு ட்ரிப் ஆக புறப்பட்டு தான் கசூரினா பீச்சுக்கோ, அல்லது சன்னதிக்கோ சென்று உவர் நீர் குளியில் போட முடியும். கொழும்பில் அவ்வாறில்லை. அதுவும் காலி வீதிக்கு அண்மையில் உள்ளவர்களுக்கு பெரிய பாக்கியம் தான். நான் மூன்று வருடங்கள் வெள்ளவத்தையில் இருந்தும் ஒரு நாள் கூட கடலில் நீச்சலடித்ததில்லை.

லண்டன் வந்தபிறகு கடலை காண்பதற்கு பல மைல் தூரம் பயணம் செய்ய வேண்டும். இங்கு இருப்பவர்கள் எல்லாம் பெரிய திருவிழா போலத்தான் பீச்சுக்கு செல்வார்கள். கோடைகால விடுமுறையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு பீச் போவது. மினைக்கட்டு பீச் போனால் கடலில் இறங்க வேண்டும். அதற்கு காலநிலை நன்றாக இருக்க வேண்டும். கடந்த வருடம் (2011) கோடை காலம் பொய்த்து மழையுடன் கழிந்ததால் என்னால் கடலுக்கு போக கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நம்மவூரு மாதிரி இல்லை, தெரியும் தானே வெளிநாடு எண்டால் கலர் கலரா நிறைய கண்காட்சி பார்த்திருக்கலாம். க்ஹ_ம் எனக்கு குடுத்து வைச்சது அவ்வளவு தான்.

சரி! வெயில் தான் ஏமாத்திடுச்சு, ஸ்னோவை ஆவது பார்ப்பம் எண்டு வெயிட் பண்ணினா அதுவும் டிமிக்கி விட்டிட்டுது. கடந்த வருடம் முழுதும் கொட்டவே இல்லை. ஐரோப்பா வந்தும் ஸ்னோ பார்க்காட்டி நல்லா இருக்குமா? ஏதோ நாம வந்த ராசி, லண்டன் சனத்துக்கு கூட ராசியில்ல போல எண்டு நினைச்சிட்டு இருந்தன். திடீரென நேற்று முன்தினம் என் ஆசையைப் பூர்த்தி செய்யுற அளவுக்கு ஸ்னோ கொட்டிச்சு. மறுநாள் வெளிய போய் படம் எல்லாம் எடுத்தன். ஆனா என்னை வைச்சு படமெடுக்க தான் யாருமில்லை. நான் அவ்வளவு துரதிஸ்டக்காரனா?











என்னை ஏமாற்றிய Summer உம், ஏமாற்றாத Winter உம்! (இடுகைத்தலைப்பு)

Post Comment

8 comments:

Sna Ad said...

arumai

Yoga.S.FR said...

வணக்கம் வரோ!இன்று(நேற்று)வரை ஸ்னோ கொட்டியது பார்க்கவில்லையா?ஆச்சரியம் தான், இல்லை?சரி படம் எடுக்க ஆட்கள் இல்லையென்றால் ஆட்டோமேட்டிக் கமராவில் செற் பண்ணி விட்டு ஓடிப்போய் நின்று ட்ரை பண்ணியிருக்கலாமே?மொபைலில் என்றால் கஷ்டம் தான்!

காட்டான் said...

அட நானும் "பல்பு" வாங்கிட்டேன்யா..

Yoga.S.FR said...

இதிலே எங்கே பிகர் வருகிறது?ஓஓஒ ஸ்னோ பிகரா?சரிதான்!

சி.பி.செந்தில்குமார் said...

பனிவிழும் மரங்களும் புகைப்படங்களும் தத்ருபம்.

அம்பலத்தார் said...

வரோ என்ன எல்லாருக்கும் பல்பு கொடுக்கிறதென்ற முடிவோடதான் இருக்கிறியளோ.

அம்பலத்தார் said...

வரோ என்ன எல்லாருக்கும் பல்பு கொடுக்கிறதென்ற முடிவோடதான் இருக்கிறியளோ. இங்கு போனவருடம் ஸ்னோ கொட்டோ கொட்டென்று கொட்டினது இந்தமுறை ஸ்னோ கொஞ்சமும் இல்லை. ஒருவாரமாக குளிர் - 10 இல் இருந்து - 20 வரையில் தொடர்ந்து இருந்து ஆளைக்கொல்லுது.

K.s.s.Rajh said...

நல்லாத்தான் கொடுக்குறீங்க பல்பு பாஸ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்