Pages

Sunday, February 5, 2012

காக்கி(ச்)சட்டை – யதார்த்தம் மீறாத ஆக்சன் சினிமா!


அறிமுகப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பஞ்ச் வசனங்கள், அடிதடி ஆக்சன் என பொளந்து கட்டும் இன்றைய தமிழ் சினிமா நாயகர்கள் மத்தியில், அன்றும் சூப்பர் ஸ்டார்களாகவே இருந்து அலட்டல் இல்லாத நடிப்பால் மக்களின் மனங்களை வென்ற இடைக்கால கமல், ரஜினியை நினைக்கும் போது பெருமையாகவே இருக்கின்றது.
அவர்கள் இன்று சிகரம் தொட்டதற்கு அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுடன் மாறாமல் இருக்கும் தன்னடக்கமே காரணம் என்றால் அது மிகையில்லை. இனி வெளிவரவிருக்கும் கோச்சடையானில் ரஜினியும், விஸ்வரூபத்தில் கமலும் அறிமுக நாயகர்களாகவே களமிறங்குகிறார்கள். (அவர்கள் ஒவ்வொரு படத்தையும் அப்படித்தான் நினைத்துக் கொள்வார்கள்)

கமலின் காக்கிசட்டை திரைப்படம் பல வருடங்களுக்கு முன்னர் தூர்தர்சன் சானலில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பார்த்த ஞாபகம். எந்தவொரு காட்சிகளும் ஞாபகம் இல்லாவிட்டாலும், சத்யராஜின் ”தகடு, தகடு” வசனத்தை மட்டும் மறக்க முடியாது. சத்யராஜூக்கு தமிழ் சினிமாவில் அடையாளத்தைக் கொடுத்த முக்கியமான படம் இது. ரஜனியுடன் நடித்த ”மிஸ்டர்பாரத்” படத்தின் ”என்னம்மா கண்ணு” மற்றும் ”காக்கிசட்டை”யின் ”தகடு, தகடு”.. இவை இரண்டுமே சத்யராஜ் இற்கு இன்றும் அடையாளமாக திகழ்கின்றது.

காக்கிசட்டையை நேற்று மீண்டும் பார்த்த போது, ”அட! இதை விரைவில் ரீமேக்காக பார்க்க வேண்டும்” என நினைத்துக் கொண்டேன். பில்லாவை மீண்டும் வெற்றிப்படமாக்கியவர்கள், த்ரீ இடியட்ஸை இரண்டு வருடங்களிலேயே நண்பனாக வெற்றிப்படமாக்கியவர்கள் நிச்சயம் காக்கிசட்டையை (1985) 27 வருடங்கள் கழித்து வெற்றிப்படமாக்குவார்கள். அதற்கு பொருத்தமான நடிகர் தேர்வும், அருமையான இயக்குனரும் வாய்க்க வேண்டும். இல்லாவிட்டால் சுந்தர் சி நடித்துவரும் ”முரட்டுக்காளை” க்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும். இந்தப்படத்தை மலையாளத்தில் நரேனை வைத்து எடுப்பதாக சொன்னார்கள். இறுதி நிலை தெரியாது. ஆனால் தமிழுக்கு இது நிச்சயம் ரீமேக்காக வரவேண்டும். இதில், விஜய் - அஜித் - விக்ரம் - சூர்யா நால்வரில் ஒருவர் ஹீரோவாக வேண்டும். எனது தெரிவு சூர்யாவே! பொருத்தமான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வாய்த்து விட்டால் படுபயங்கர ஸ்டைலிஸ்ஸான ஒரு படம் ரெடி.
டி.வி.டி ல படத்தைப்பார்த்தாலும், சிபி அண்ணாச்சி போல என்னால 50 வசனங்களை எல்லாம் ஞாபகம் வைச்சிருக்க முடியல. எனக்கு மனசில பட்ட (அல்லது மனதோட ஒன்றின) இரண்டு வசனங்களையும் அது தொடர்பா நான் சொல்ல நினைச்ச விசயத்தையும் சொல்லிடுறன்.

”பெண்ணோட மனசை புரிஞ்சுக்கிறதுக்கு இன்னும் இந்த உலகத்திலை எவரும் பிறக்கலை?”

இது, மாதவியால கமலுக்கு சொல்லப்படுது. அடங்கொன்னியா! இது 27 வருசத்துக்கு முதல் சொன்ன வசனமப்பா. இன்னும் தான் நம்மளால ஒரு பொண்ணையும் புரிஞ்சுக்க முடியல. அதாகப்பட்டது என்னவெனில், தங்களை ஆம்பிளைங்க புரிஞ்சு நடந்துக்கணும் எண்டு அவங்க நினைச்சுக்கிட்டே இருப்பாங்களாம். நாங்களும் அவங்களைப் புரிஞ்சுக்கணுமாம். என்ன கொடுமை சார் இது, ஆம்பிளைங்க உங்களைச் சரியாத்தான் புரிஞ்சுக்கிறாங்க மேடம்ஸ்!. நீங்க கொஞ்சமாவது அவங்களைப் புரிஞ்சுக்க ட்ரைய் பண்ணுங்க. அப்புறமா தெரிஞ்சுப்பீங்க அவங்க உங்களை எவ்வளவு புரிஞ்சு வைச்சிருக்கிறாங்க எண்டு. அதை விட்டிட்டு.. போங்கம்மா.. போயி வேலையப்பாருங்க..

”நினைக்கத் தெரிஞ்ச மனசுக்கு மறக்கவும் தெரியணும்”

இந்தக் கருமாந்திரம் தெரியாமல் தானே நானும் இம்புட்டு நாளா கஸ்டப்பட்டிட்டிருக்கன். அட்வைஸ் பண்ணுறது ஒண்டும் பெரிசில்லை கண்ணா! அதை அனுபவிச்சு பார்க்கிறது தான் பெரிசு.
இடைக்கால படங்களில் இருக்கின்ற கிளாமர் இன்றை படங்களிலை கொஞ்சம் கூட இல்லை என்பதை நான் கிடைக்கும் இடங்களில் எல்லாம் எழுதி வாறன். கமல் - ரஜினி, சில்க் ஸ்மிதா கூட நடிச்ச மாதிரி இன்றை இளம் ஹீரோக்கள் எவருமே நடிக்கலை. அதுபோக ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, அம்பிகா, ராதா, மாதவி (லிஸ்ட் ரொம்ப நீளமுங்க) நடிச்சது போல கவர்ச்சியா இன்று இருக்கிற எந்தவொரு முன்னணி நாயகியும் நடிக்கல. தமிழ் சினிமாவில முன்னணி நாயகிகளை பிகினியோட பார்த்து எவ்வளவு காலமாச்சு. தொழில்நுட்பத்திலை தமிழ்சினிமா முன்னேறினாலும், இம்மாதிரியான விசயங்களிலை தமிழ் சினிமா ரொம்ப ரொம்ப பின்னாடி போகுதுங்க.

காக்கிசட்டையை ரீமேக் பண்ணினால் காதல் - ஆக்சன் - கிளாமர் என எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படம் ஒன்றை தந்து தயாரிப்பாளர் கல்லாவையும் நிரப்பிக் கொள்ளலாம்.

Post Comment

6 comments:

Kumaran said...

இந்த படத்தை ரொம்ப நாட்களுக்கு முன்னம் பார்த்த ஞாபகம்....காட்சிகள் பலவும் சரியாக நினைவில் இல்லை..நல்ல படம்..கமல் மற்றும் சத்யராஜின் நடிப்பு சிறப்பாக இருக்கும்..ஒரு நல்ல தமிழ்படத்தை இத்தனை வருடங்களுக்கு பிறகு நினைவில் கொண்டு ஒரு பதிவாக வழங்கிய தங்களுக்கு என் நன்றிகள்.

சைக்கோ திரை விமர்சனம்..

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

என்ன வரோ திடீரென்று ரிவேர்ஸில் போய்விட்டீர்கள்? இருந்தாலும் காக்கிச்சட்டை ரீமேக் ஐடியா சூப்பர்!

T.N.MURALIDHARAN said...

இந்தப் படம் சத்யராஜை பிரபலமாகியது.ரீமேக்கிற்கு ஏற்ற படம்தான்.

விமலன் said...

நல்ல பதிவு .வாழ்த்துக்கள்./

Yoga.S.FR said...

வணக்கம் வரோ!///"நினைக்கத் தெரிஞ்ச மனசுக்கு,மறக்கவும் தெரியணும்"இந்தக் கருமாந்திரத்தை தெரியாம தானே நான் இம்புட்டு நாளா கஷ்டப்பட்டிட்டிருக்கன்.///வேதனை கலந்த வார்த்தைகள்.SORRY!Really sorry!

Gemini said...

அதான் ஏற்கனவே விஜய் நடித்து ' போக்கிரி' ன்னு வந்துடுச்சே ..அண்டர்கவர் போலிஸ் ங்கிற ஒரே தீம் தான் ரெண்டு படத்துலேயும்..

ஆனா, ஒரே வித்தியாசம் காக்கிசட்டை கமலோட இயல்பான நடிப்புல
ரசிக்கும்படியா இருந்துச்சு