Pages

Wednesday, February 15, 2012

“16 வயதினிலே” ஸ்ரீதேவியும், நம்மவூரு பெண்களும்!


முன்பெல்லாம் பிரதி ஞாயிறு தோறும் தூர்தர்ஸன் சானலில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்தை தவமாய் தவமிருந்து பார்ப்பது வழக்கம். அப்பொழுதெல்லாம் படம் ஆரம்பிக்கும் போது என்ன படம் என தெரிந்திருக்காது. மேலும், கீழும் இரண்டு கறுப்பு சட்டங்களுக்கு இடையில் படம் தோண்ற ஆரம்பித்தால் “புதுப்படம்” என சந்தோசப்படுவதும், முழு டி.வி திரையையும் ஆக்கிரமித்தால் “பழைய படம்” என மனம் சோர்வதும் வழக்கம். இருந்தும் என்ன செய்வது வேறு வழியின்றி எந்த கருமாந்திரப்படம் போட்டாலும் பார்ப்பதுண்டு. நடிகர் - நடிகை - இயக்குனர் - இசையமைப்பாளர் என எவற்றையும் கவனத்தில் எடுக்காது படத்தை மட்டும் ரசிப்பது. அன்று நான் ரசிக்கத் தவறிய பல படங்கள் “தமிழ் சினிமாவிலேயே திருப்பு முனையான படங்கள்” என பின்னாளில் தெரிந்து கொண்டேன். அப்படியான ஒரு படம் தான் “16 வயதினிலே!”
படத்தில் கமலின் அசிங்கமான முகத்தை பார்க்கும் போதே எனக்கு படத்தைத் தொடர்ந்து பார்க்க பிடித்திருக்கவில்லை. பல தடவைகள் அந்தப்படத்தைப் பார்த்த போதும் ஒரு தடவையேனும் முழுமையாக பார்க்கவில்லை. பல வருடங்களின் பின் நேற்று அந்தப்படத்தைத் தேடிப்பார்த்தேன். எப்பேர்ப்பட்ட படத்தை நான் “உதவாத படம்” என நினைத்திருக்கிறேன் என எண்ணிச் சிரித்தேன். என் “உதவாத பட” லிஸ்ட்டில் பல படங்கள் இருந்தாலும் பாரதிராஜாவின் “கல்லுக்குள் ஈரம்” படத்தைப் பார்க்க ஆசைப்படுகிறேன். ஏன்னா, இந்தப்படத்தைப் பிடிக்காத அளவிற்கு தமிழ்ல வேற எந்தப்படமும் பிடிக்காமல் போகல!

16 வயதினிலே பார்க்கும் போது என்னை ஆக்கிரமித்த பாத்திரமென்றால் அது ஸ்ரீதேவியுடையது. அண்மைக் காலங்களில் நான் அடிக்கடி அவதானித்துக் கொண்டிருக்கும் ஒரு விடயம். பெண்களின் மனநிலை என்ன? என்பது பற்றி முழுமையாகத் தெரியாவிட்டாலும், ஓரளவாவது ஊகிக்க எங்களால் முடியும். இது பற்றி சின்ன ஆய்வு கூட செய்தேன் என்றால் பாருங்களேன்.

இலங்கை மற்றும் லண்டன் நண்பிகளிடம் (திருமணமானவர்களும் உள்ளடக்கம்) ஒரு கேள்வியைக் கேட்டேன். “ஒரு பையன் உன்னைப்பார்த்து அழகா இருக்காய்! அப்பிடீன்னு சொல்லுறான். நீ எப்பிடி அதை எடுத்துப்பாய்?”. மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் சொல்ல வேண்டும் என தயவாகக் கேட்டுக்கொண்டேன். 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் சொன்ன பதில் “சந்தோசப்படுவேன்” என்பதாகும்.

“ஆண்கள் என்ன நோக்கத்திற்காகச் சொல்கிறார்கள், அவர்கள் சொல்வது போல நான் அழகு தானா?” போன்ற எந்தவொரு சுய மதிப்பீடும் இல்லாமல் வெறும் வார்த்தைகளை நம்பி சந்தோசப்படும் இவர்களை என்னவென்று சொல்வது? இன்று (குறிப்பாக) யாழ்ப்பாணத்தில் “காதல்” எனும் போர்வையில் ஏமாந்து கொண்டிருக்கும் அல்லது ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் சகோதரிகளின் “வீக் பாயிண்ட்” என்னவென்று தெரிந்து ஆண்கள் கட்டம் கட்டி விளையாடுகிறார்கள். எனவே அவதானமாக இருக்க வேண்டியவர்கள் பெண்கள் தானே! “பொம்பிளை சிரிச்சாப்போச்சு, புகையிலை விரிச்சாப்போச்சு” என பழமொழி ஒன்று இருக்கின்றது. உங்கள் பாதுகாப்பிலும், உங்கள் எதிர்காலத்திலும் கவனமாக இருக்க வேண்டியவர்கள் நீங்கள் தான். உங்கள் பின்னாலும், முன்னாலும் பெற்றோர்கள் - சகோதரர்கள் எந்நேரமும் காவலுக்கு இருக்க முடியாது. அப்படி கண்ணுங்கருத்துமாக காவல் காக்குமிடத்தில் தான் தவறுகளும் அதிகளவில் இடம்பெறுகின்றது.
இதேபோல், ஒரு ஆணிடம் பெண்ணொருவர் “நீங்க அழகா இருக்கீங்க” அப்பிடிச் சொன்னா 90 சதவீதமான பசங்க “யோவ்! இந்தப் பொண்ணு நம்மை கலாய்க்குதுப்பா!” அப்பிடித் தான் நினைப்பாங்க. இது நிதர்சனம். தங்கள் அழகில் கர்வம் கொள்ளும் பழக்கம் ஆண்களுக்கு கிடையாது. தவிர பெண்களும் ஆண்களின் அழகை 100 வீதம் எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் ஆண்கள், முன் பின் அறியாத பெண்களிடம் அழகைத் தான் முதலில் எதிர்பார்ப்பார்கள். நெருங்கிப் பழகும் நண்பிகளிடமோ, காதலிகளிடமோ அழகை எதிர்பார்க்க மாட்டார்கள். இது புரியாமல் பெண்கள், தாங்கள் எப்போதும் அழகாக இருப்பதாக நினைத்துக் கொள்வதும், அல்லது அழகாக இருப்பதற்கான முயற்சிகளை எடுத்துக் கொள்வதும். “அழகாய் இருக்கிறாய்” என கூறுபவர்களின் வார்த்தையில் மயங்கிவிடுவதும் வழக்கமாகிவிட்டது.

16 வயதினிலே ஸ்ரீதேவிக்கு ஒரு கர்வம். அதாவது ஊரில் தானே அழகான அறிவான பெண்ணென.. அதற்கு ஏற்றது போல கூட்டத்தில் யாரோ ஒருவர் “இவளை கட்டுவதற்கு டாக்டரோ, இஞ்சினியரோ வருவான்” என கூறிவிட்டனர். பிறகென்ன சொல்லவும் வேண்டுமோ? வானத்தில் சிறகடித்துப் பறந்த ஸ்ரீதேவி, அவ்வூருக்கு வரும் டாக்டர் மேல் காதல் வயப்படுகிறார். ஆனால் டாக்டருக்கோ ஸ்ரீதேவியின் உடம்பு மேல் தான் காதல். இது புரியாத ஸ்ரீதேவி ரொம்பவும் நம்பி ஒரு கட்டத்தில் ஏமாந்து போகிறார். பிறகு தன்னையே நினைத்து வாழும் சப்பாணி கமல் மேல் காதல் கொள்கிறார். உண்மைக்காதல் என்ன என்பதை உணர்ந்து கொள்கிறார்.

டாக்டர் மேல் ஸ்ரீதேவி காதல் வயப்படுகையில் கற்பு பறிபோகும் சூழ்நிலை ஒன்று வரும்போது கொஞ்சம் சுதாகரித்ததால் அந்த கற்பு பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அது பாரதிராஜாவின் சினிமா. திரைக்கதையை எப்படியாவது வைத்துக் கொள்ளலாம். இதையே நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிடுங்கள். அன்று ஸ்ரீதேவிக்கு கற்பு பறிபோயிருப்பது உறுதி. ஏனெனில் அவர் தன்னிலையில் இல்லை என்பதை பாரதிராஜா அழகாகக் காட்டியிருப்பார். சடுதியாக ஏற்பட்ட கலாசார மாற்றத்தால் யாழ்ப்பாணத்தில் பல பெண்கள் கற்பை இழந்து வருகின்றார்கள். இது காதும் காதும் வைத்தது போல் நடந்து வருவதால் வெளி உலகிற்கு தெரிய வாய்ப்பில்லை. என்னிடம் பல ஆதாரங்கள் இருக்கின்றன. பல முறை எழுத எத்தணித்த போதும் ஒவ்வொரு முறையும் பிற்போட்டுக்கொண்டே போகின்றேன். அவற்றை எழுதுவதன் மூலம் “கலாசார காவலன்” என்ற பட்டத்தைப் பெறுவது என்நோக்கமல்ல. பெற்றோர்களை விழிப்படையச் செய்ய வேண்டும். அது என் ஒருவனால் மட்டும் முடியுமா?

ஸ்ரீதேவி விடும் தவறைப்போல் பல மடங்கு தவறுகளை எம் சகோதரிகள் விட்டுவருகின்றனர். அதுவும் குறிப்பாக டீன்-ஏஜ் வயதைத் தாண்டியவர்கள் என நினைக்கும் போது என்ன அறிவுரையைக் கூறுவதென்றே தெரியவில்லை. இவர்களில் பலர் “காதல்” என்ற பெயரில் நம்பி ஏமாறுகிறார்கள். ஒரு பழமொழி கூறுவார்கள் “ஆண்கள் சேறு கண்ட இடத்தில் மிதித்து, குளம் கண்ட இடத்தில் கழுவுவார்கள்” என நான் ஒரு ஆணாக இருந்து கொண்டு இந்த அறிவுரையை உங்களிடம் விட்டுச் செல்கின்றேன். ஊசியும் நூலும் இணைந்தால் தால் கோர்க்க முடியும். இந்த இணைவுக்கு பெண்கள் துணை போகாதீர்கள்.
16 வயதினிலே படத்தைப்பார்க்கும் போது எனக்கு சப்பாணியின் பிரமாதமான நடிப்போ, பரட்டையான சூப்பர் ஸ்டாரின் “இதெப்பிடியிருக்கு” பஞ்சோ, கௌண்டான்மணியாகிய அண்ணன் கவுண்டமணியோ அல்லது வேறு எவருமோ ஞாபகத்தில் நிற்கவில்லை. மயிலு என்ற அபலையான ஸ்ரீதேவியே என் மனம் பூராகவும் நிரம்பியிருக்கின்றது. இப்படியான பல நம்மவூரு மயிலுகள் பற்றி அண்மைக்காலத்தில் நான் கேள்விப்பட்ட விடயங்களே மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலைமையை விரைவில் தீர்க்க வேண்டுமே!(?)

Post Comment

16 comments:

மதுரன் said...

வணக்கம் வரோ அண்ணை

16 வயதினிலே நான் இன்னும் பார்க்கவில்லை.. ஆனால் சிறீதேவியை ரொம்ப பிடிக்கும்..

அடுத்தது யாழ்ப்பாண விடயம்..
கையாளுவது ஆபத்தானது . எழுதும்போது அவதானம் தேவை. ஆதாரம் இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் எழுத முற்பட்டால் நியூ ஜஃப்னா ரேஞ்சுக்கு போய்விடும்.

இந்த விடயத்தில் பெண்களை குறை சொல்ல முடியாது.. எமது குறைபாடான சமூக கட்டமைப்பும், கல்வி முறையின் பலவீனமுமே காரணம்.. இது பற்றி நிறைய கதைக்கலாம். நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன்

KANA VARO said...

மதுரன் said...
வணக்கம் வரோ அண்ணை

அடுத்தது யாழ்ப்பாண விடயம்..
கையாளுவது ஆபத்தானது . எழுதும்போது அவதானம் தேவை. ஆதாரம் இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் எழுத முற்பட்டால் நியூ ஜஃப்னா ரேஞ்சுக்கு போய்விடும்.//

அது தான் எழுதவில்லை மது! தவிர, “உவர் லண்டனில இருந்து கொண்டு கத்துறார். இங்கை இருந்திருந்தா இவரும் இதைத்தான் செய்திருப்பர்” என்ற கருத்தும் வரும்.

அம்பலத்தார் said...

வரோ, மிகவும் நல்ல விடயத்தை உளவியல் ரீதியான கருத்துடன் கையாண்டிருக்கிறீர்கள். மது கூறியதுபோல இந்த விடயத்தை மிகவும் அவதானத்துடன் அணுகவேண்டும்.

அம்பலத்தார் said...

தனி ஒருவரையும் பாதிக்காதவிதமாக விவாதிப்பதே நல்லது என நினைக்கிறேன்

KANA VARO said...

அம்பலத்தார் said...
வரோ, மிகவும் நல்ல விடயத்தை உளவியல் ரீதியான கருத்துடன் கையாண்டிருக்கிறீர்கள். மது கூறியதுபோல இந்த விடயத்தை மிகவும் அவதானத்துடன் அணுகவேண்டும்.//


நிச்சயமாக,
சொல்லவும் வேண்டும். ஆனால் அவதானமாகவும் சொல்ல வேண்டும். கொஞ்சம் கூட எழுதினால் ஆபாசப்பதிவாகவும் மாறிவிடும். சரியான கடிவாளங்களுடன் கையாள வேண்டும். ஒரே குழப்பமா இருக்கே!

மணி இது சம்பந்தமான விடயங்களில் விழிப்புணர்வூட்டுவதற்காக எழுதிய பதிவுகளுக்கு கிடைத்த எதிர்ப்பை பார்த்தோம் தானே! அதனால் இன்னும் அவதானம் தேவை.

KANA VARO said...

அம்பலத்தார் said...
தனி ஒருவரையும் பாதிக்காதவிதமாக விவாதிப்பதே நல்லது என நினைக்கிறேன்//

தனி ஒருவரை தாக்க வேண்டிய தேவை ஏற்படாது. அதே போல சிலரை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தையும் தாக்க முடியாது.

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

அருமையான பதிவு வரோ! ஒரு படம் பற்றி சும்மா மேலோட்டமா சொல்லாமல், அதன் சாரம்சத்திலிருந்து, நல்லதொரு கருத்தை எடுத்து, அழகாகச் சொல்லியிருக்கிறீங்க! அருமை!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

மணி இது சம்பந்தமான விடயங்களில் விழிப்புணர்வூட்டுவதற்காக எழுதிய பதிவுகளுக்கு கிடைத்த எதிர்ப்பை பார்த்தோம் தானே! அதனால் இன்னும் அவதானம் தேவை.//////

அதான், ஒரு கோதாரியும் வேண்டாம் எண்டு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சு போட்டு, சும்மா இருக்கிறன்!

KANA VARO said...

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
அருமையான பதிவு வரோ! ஒரு படம் பற்றி சும்மா மேலோட்டமா சொல்லாமல், அதன் சாரம்சத்திலிருந்து, நல்லதொரு கருத்தை எடுத்து, அழகாகச் சொல்லியிருக்கிறீங்க! அருமை!//

ஒரு படம் பார்க்கும் போது “இதிலிருந்து எப்படி பதிவெழுதலாம்” என சிந்தித்துக் கொண்டே பார்ப்பதால் படத்தில் லயிக்க முடிவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்.

KANA VARO said...

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
மணி இது சம்பந்தமான விடயங்களில் விழிப்புணர்வூட்டுவதற்காக எழுதிய பதிவுகளுக்கு கிடைத்த எதிர்ப்பை பார்த்தோம் தானே! அதனால் இன்னும் அவதானம் தேவை.//////

அதான், ஒரு கோதாரியும் வேண்டாம் எண்டு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சு போட்டு, சும்மா இருக்கிறன்!//

யோவ்! நீர் சும்மா இருந்தா ஆபத்தையா.. ஏதாவது போட்டுக்கும்.

ஹாலிவுட்ரசிகன் said...

நானும் பதினாறு வயதினிலே படத்தைப் சிலமுறை பார்த்திருக்கிறேன்.மேலோட்டமாக. ஆனால் நீங்கள் கூறியபின் தான் ஸ்ரீதேவியின் பாத்திரத்தை பற்றி யோசித்துப் பார்க்கிறேன். நீங்கள் கூறுவது மிகச் சரி.பகிர்வுக்கு நன்றி.

KANA VARO said...

ஹாலிவுட்ரசிகன் said...
நானும் பதினாறு வயதினிலே படத்தைப் சிலமுறை பார்த்திருக்கிறேன்.மேலோட்டமாக. ஆனால் நீங்கள் கூறியபின் தான் ஸ்ரீதேவியின் பாத்திரத்தை பற்றி யோசித்துப் பார்க்கிறேன். நீங்கள் கூறுவது மிகச் சரி.பகிர்வுக்கு நன்றி.//

ம்ம்ம். எந்த படத்தை பார்த்தாலும் அதில் கொஞ்சம் ஊறி பார்ப்பதால் அந்த பாத்திரங்களை வாழ்க்கையுடன் சம்பந்த படுத்த முடிகிறது

ஆமினா said...

//எந்தவொரு சுய மதிப்பீடும் இல்லாமல் வெறும் வார்த்தைகளை நம்பி சந்தோசப்படும் இவர்களை என்னவென்று சொல்வது? //

அவ்வ்வ்வ்வ்

முழுசா படிக்காம ஸ்டேடஸ் போட்டா இப்படிதான் பல்பு வாங்கணுமோ :-p

நல்லதொரு கருத்தை சொல்லியிருக்கீங்க வரோ. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை மிக அருமை. மனிதர்களை இனம் பிரிக்க கற்றுக்கொண்டாலே அபலைகளின் எண்ணிக்கை குறையும்.

மகேந்திரன் said...

அன்றைய காலகட்டத்தில் இருந்த
திரைப்பட இலக்கணங்களை உடைத்து எறிந்து
புதிய போக்கைக் காட்டிய ஒரு அருமையான படம்

மயிலு குணாதிசயம் நீங்கள் சொன்னது போல
இன்னும் மனதில் நிழலாடுகிறது..

இன்றைக்கு மட்டுமல்ல எந்த காலகட்டத்திலும்
இந்த குணாதிசயம் புதிதாகவே தோன்றும்..

Yoga.S.FR said...

வணக்கம் வரோ!விமர்சித்த விதம் அருமை!"பதினாறு வயதினிலே"சிறீதேவி போல் பல சம்பவங்கள் உண்டு தான்.சிறுகதைகளாக உருவாக்கலாமே?அப்போது பழி ஓரிடம்,பாவம் ஓரிடமாகாதே?விழிப்பையும் ஏற்படுத்த முடியும்!

Panangkoddai said...

ஐ லைக் இற் பாஸ். யாழ்ப்பாணத்தின் நிலைமை கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான். அத எல்லாம் பதிவில போட்டு இருக்கிற கொஞ்ச நஞ்ச மானம் மரியாதையையும் கெடுத்துப் போடாதையுங்கோப்பா....