Pages

Friday, January 6, 2012

பரீட்சைப் பெறுபேறுகள் : முதல்ல உங்க மைக்கை ஆப் பண்ணுங்க சாரே!


கடந்த வருட இறுதி வாரங்களில் கொழும்பில் ஒரு சலசலப்பு “2011ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் குளறுபடி”, அதாவது விடைத்தாள்களைத் திருத்தியர்களிடம் தில்லுமுல்லு - பரீட்சைத் திணைக்களத்தில் குளறுபடி. இந்த வருட ஆரம்பத்தில் மீண்டும் கொழும்பிலிருந்து ஒரு சலசலப்பு, “சட்டக்கல்லூரி பெறுபேறுகளில் குளறுபடி”. இங்கும் திருத்தியவர்கள் மீதும் பரீட்சைத் திணைக்களத்தின் மீதுமே குற்றச்சாட்டு. மாணவர்கள் மீதல்ல..
ஏன் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன?
உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகளைப் பொறுத்தமட்டில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மாணவர்கள் முன்னணியில், அதேபோல் சட்டக்கல்லூரி பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ் மாணவர்களின் வீதாசாரம் அதிகளவில் உண்டு.

இதே போன்றதொரு கொழும்பிடமிருந்தான ஒப்பாரி கடந்த 2005ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான போது ஏற்பட்டது. அந்த வருடம் அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடத்தையும், விஞ்ஞானப்பிரிவில் இரண்டாம் இடத்தையும் தமிழ் மாணவர்கள் பெற்றிருந்தனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்ட காணொளி

இல்லை சார், நான் தெரியாமல் தான் கேட்கிறன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில், க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தமிழ் மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முன்னிலை பெறாவிட்டால் தமிழர் தரப்பில் இருந்து இப்படியான ஒப்பாரிகள் ஏதாவது எழுவதுண்டா? பிழையோ, சரியோ வந்த பெறுபேறுகளை ஏற்கின்றோம். (ஒப்பாரி வைச்சு பலன் கிடைக்கப்போறதில்லை எண்டுறதால). ஆனால் நீங்க மட்டும் ஏன் சார் தமிழ் மாணவர்கள் முன்னிலை பெறும்போது இப்பிடிச் செய்யுறீங்க?

உங்க கோரிக்கையை ஏற்று கடந்த 2005ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்யப்பட்டது. தரப்படுத்தலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற சி.மயூரன் தொடர்ந்தும் முதலிடம் பெற்றார். (ஆதாரம் சரியா இருக்கும் போது எப்பிடி சேதாரம் ஆகும்) ஏனைய தமிழ் மாணவர்கள் கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்தார்கள் என நினைக்கிறேன்! இந்த வருடமும் அதே போன்றதொரு நிலை ஏற்படுமா?

அடுத்து, சட்டக்கல்லூரி பெறுபேறுகள் தொடர்பாக புதிதாக எழுந்திருக்கும் பிரச்சினை :
உண்மையில் இந்தமாதிரியான பிரச்சினை முஸ்லிம்கள் அல்லாத தமிழ் மக்களிடம் இருந்து எழுந்திருந்தால் அது நியாயமானது, அது ஏன் என வெளியிடப்பட்ட பெறுபேறுகளை நீங்களே பாருங்கள். இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் முஸ்லீம்கள் அல்லாத தமிழ் மாணவர்களின் பிரதிநிதித்துவம் மிக மிக குறைவு. ஆனால் தமிழ் மாணவர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு எதிர்ப்பும் இல்லை. வெறும் ஆதங்கங்கள் மட்டுமே! ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மாணவர்களின் சட்டக்கல்லூரி நுழைவு பெறுபேறுகளைப் பார்த்து சிங்கள மாணவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
இங்கு சட்டக்கல்லூரி தேர்வுகள் குறித்த சில விடயங்களையும் குறிப்பிடுகின்றேன். நாடளாவிய ரீதியில் 8ஆயிரம் தொடக்கம் 10ஆயிரம் வரையான பரீட்சார்த்திகள் எழுதும் இந்த பரீட்சையின் மூலம் 200 மாணவர்கள் மட்டுமே வெட்டுப்புள்ளியின் மூலம் தெரிவு செய்யப்படுவர். (வெட்டுப்புள்ளியைப் பொறுத்து மாணவர்களின் எண்ணிக்கை கூடிக்குறையும்). ஒரு புள்ளி குறைவாக எடுத்தவர்கள் கூட அந்த பெறுபேறை வைத்துக் கொண்டு எதுவுமே செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை உண்டு.

இந்தக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மத்தியில் வக்கீல்களின் வாரிசுகளும், பிரபலங்களின் வாரிசுகளுமே அதிகளவில் உள்நுழைகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றது. அவர்கள் பின் கதவுகளால் நுழையும் போது, திறமையான மாணவர்கள் முன் கதவால் வெளியேற வேண்டியது தான். மாணவர்கள் தங்கள் பெறுபேறுகள் தொடர்பில் மீளாய்வு செய்ய முடியாது என நினைக்கிறேன் (தெரிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்). இங்கு பரீட்சைத் திணைக்களத்தின் கைகளை விட அதிகார வர்க்கத்தின் கைகளே மேலோங்கும்.

பெரும்பான்மையின மாணவர்கள் பாதிக்கப்படும் போது மட்டும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வருகின்றது. என் சந்தேகம், உங்கள் ஆட்கள் தானே எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் வேண்டுமென்றே தமிழ் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்களா? உங்கள் எதிர்ப்புக்களில் இருந்து நீங்கள் நினைப்பது என்ன என்ற ஒன்று மட்டும் எனக்குப் புலனாகின்றது “தமிழ் மாணவர்கள் கல்வியில் சாதிக்கவே மாட்டார்கள்”. காலம் பூரா இப்பிடியே நினைச்சிட்டிருங்க. நல்லா வெளங்கிரும்..


Post Comment

5 comments:

Jana said...

சமுகத்தை நன்கு உற்றுநோக்கும் ஒரு இளைஞனின் ரொத்திரம் இறுதிவரிகளில். இலங்கையில் பாடத்திட்டமும், பரீட்சைகளும் எப்போதுமே அப்படித்தானோ?

துஷ்யந்தன் said...

வரோ அண்ணன் கோபபட்டுட்டாரே??!!!! அவ்வவ்...
விடுங்கண்ணே விடுங்கண்ணே.... இலங்கையில் இப்படி எல்லாம் நடக்காட்டித்தானே ஆச்சரியம்.... :( நாம எல்லாம் இதை பார்த்தும் பார்க்காளால் இருக்க நல்லா கத்துக்கிட்டோம் :(

தனிமரம் said...

இந்தக் குளறுபடிகள் எல்லாம் வெறும் அரசியலுக்கும் மாணவர்களிடையே பிரிவினையை விதைப்பதற்கும் செய்யும் செயல் அன்றி உண்மையான ஆதங்கத்தில் அல்ல!இதை ம.வி.மு.(ஜே.வி.பி.) மாணவர் அமைப்புத் தான் அதிகம் தூண்டுவது அவர்கள் களனி பக்கம் என்றாலும் மொரட்டுவ என்றாலும் முண்டியடித்து தமிழ் மாணவர்கள் மீது வெறுப்பை உமிழ்வது காலாகாலமாக நடக்குது அதனால் தான் பலர் வெளிநாட்டில் சட்டம் படிக்கப் போவதுடன் உயர் கல்வியையும் தொடர்கின்றார்கள்!இதைப் பற்றி பேசவேண்டிய தமிழ் அமைச்சர்களோ,பா.உறுப்பினர்களோ ஏதாவது பேசியதாக நாளேடுகள் பதிவு செய்தது இல்லை!உண்மையில் சிங்களவர் தம்மாணவர்கள் மீது அனுதாபம் இருந்தால் மகியாங்கனை,மொராகல,அம்பேபுஸ்ஸ ,தலாவ மாணவர்கள் உயர்தர பரீட்சையில் படும் பின்னடைவுக்கு உதவி செய்யலாமே இந்த ஒப்பாரியை சில புல்லுரிவி மாணவர் அமைப்பும் அவர்களை தூண்டும் நாதாரிகளுமே அதிகமாக கொழும்பில் சலசலப்பை ஏற்படுத்து! இந்த நிலை எப்போதும் தொடரத்தான் செய்யும்!

Yoga.S.FR said...

வணக்கம் வரோ!எழுபதுகளில் இந்த நிலையை தரப்படுத்தலால் சீர்செய்து விடலாம் என்றே அன்று சிறீமாவோ அம்மையார் திட்டமிட்டார்.போதாதென்று வெட்டுப்புள்ளி,குத்துப்புள்ளி என்றெல்லாம் தொடர்ந்து வந்த பேரினவாதத்தால் ஒன்றையும் புடுங்க முடியவில்லை.இப்போது,தலையே சரியில்லைஎன்று கூப்பாடு போடுகிறார்கள். நீதிமன்றம் வரை செல்கிறார்கள்.பட்டினி போட்டாலும்,கொத்துக்குண்டு போட்டாலும் "என்னைப்பார்" என்று கடந்த ஆண்டு ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசினைப் பெற்று அமைச்சர் காலில் வீழ மறுத்த மறத்தமிழனைப் பெற்றவர்கள் நாங்கள்.இப்போது இவ்வாறு பரீட்சைகளில் குளறுபடி நடந்து விட்டது மீளவும் சரிபாருங்கள் என்று கூப்பாடு போடுவோருடன் தான் " நல்லிணக்கம்"ஏற்படுமாம்!த்தூ!!!!!

தர்ஷன் said...

உண்மையான உங்கள் ஆதங்கம் புரிகிறது.