Pages

Friday, August 19, 2011

கமெண்ட் பண்ணுவது எப்படி? – படு சீரியஸான தொ.நுட்ப பதிவு

மூன்றாவது வருடம் வலைப்பதிவுலகில் நடைபோட்டு வருகின்றேன். இதுவரை சினிமா, அரசியல், விளையாட்டு, நகைச்சுவை என பலதரப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொண்டாலும் ஒரு தொழில்நுட்ப பதிவும் எழுதவில்லை. அந்த குறையைப் போக்க ஆழமாக யோசித்து ஒரு தொழில்நுட்ப பதிவு இன்று. இதையும் எழுதலைன்னா என்னை எல்லாம் ஒரு ப்ளாக்கராவே மதிக்க மாட்டாங்க. (இப்ப மட்டும் என்ன வாழுதாம்!)

இந்தப் பதிவு, கடைசியா கந்தசாமி அண்ணாச்சி போட்ட தொ.நுட்ப பதிவுக்கு எதிர்ப்பதிவு இல்லை எண்டுறதை மைந்தனின் ஹன்சிகா மேல சத்தியம் பண்ணுறன்.

நம்ம கடைக்கு சராசரியா ஒரு நாளைக்கு 500 பேர் வாராங்க. (போடுற சரக்கைப் பொறுத்து கூடும், குறையும்) “புதுப்பெண்டாட்டியை பர்ஸ்நைட்ல உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஏற இறங்கப் பார்க்கிற மாதிரி” வடிவா சுத்திப் பார்க்கிறாங்க. அப்பிடியே போயிடுறாங்க. எவனே 10 – 15 பேர் தான் சாமான் வாங்குறாங்க. அதுவும் நான் காசு குடுத்து “சாமான் வாங்க வாங்கடா” எண்டு கூப்பிடுற மாதிரி பக்கத்து கடைக்காரனுக்கு தெரியுது. இந்த விசயம் நம்ம கடையில மட்டுமில்ல எல்லாக் கடையிலையும் நடக்கிற விசயம் தான். கடை எண்டா என்னெண்டு விளங்கினது தானே மாப்பிளைங்களா?

எங்கள் பதிவுகளுக்குரிய ரெஸ்போன்ஸ் பின்னூட்டம் அல்லது வாக்கு. அது தங்களுக்கு கிடைக்க வேண்டும் என எல்லாப் பதிவர்களும் ஆசைப்படுவார்கள். தாங்கள் யாருக்கும் அதைச் செய்ய மாட்டார்கள். (இந்த லிஸ்ட்ல முதலாவது அகசியம் வலைப்பூவின் ஓனர்) இதுக்கு என்ன காரணமாக இருக்கலாம் என பாத்ரூமில் இருந்து யோசித்த போது ஒரு விசயத்தை ஊகிக்க முடிந்தது. பலருக்கு பின்னூட்டத்தை எங்கே இடுவது எனத் தெரியவில்லை. இதற்காக 10 நாள் ஹோம் வேர்க் பண்ணி நான் ஒரு இடத்தை கண்டு பிடிச்சிருக்கிறன்.

எங்காவது திரட்டிகளில், இல்லாவிடின் தேடுபொறிகளில் வலைத்தளம் ஒன்றுக்கு செல்லுங்கோ. அங்கே நீங்கள் வாசிக்க விரும்பும் பதிவு ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் தலைப்பில் கிளிக்குங்கோ. பதிவை ஆற, அமர வாசியுங்கள். பதிவு முடிந்த பிற்பாடு யார், யாரோ வந்து சம்பந்தம் இல்லாமல் கதைச்சிருப்பாங்க. அப்பிடியே பொறுமையா கடைசி மட்டும் வாங்கோ, இப்ப இப்பிடி ஒரு விசயம் இருக்கும். Post a Comment அதை கிளிக்குங்கோ!

Leave Your Comment இப்பிடி ஒரு பொக்ஸ் வரும், அதுக்குள்ள நீங்க நினைக்கிற என்ன கன்றாவியை எண்டாலும் அடிச்சு Publish Your Comment ஐ கிளிக் பண்ணி விடுங்கோ! சிலவேளை உங்கட கமெண்ட் உடன வரும். இல்லாட்டி ஓனர் வந்து பப்பிளிஸ் பண்ணும் மட்டும் அடிக்கடி வந்து பாருங்கோ! ஓசில ஹிட்ஸ் கிடைக்கும்.

அச்சாப் பிள்ளையள் நான் சொல்லித் தந்த மாதிரி எனக்கு கமெண்ட்ஸ் போடுங்கோ!

இன்னொரு நாள் “வாக்கு போடுவது எப்படி?” எண்ட தொ.நுட்ப பதிவுடன் உங்களைச் சந்திக்கிறன். (எவன்டா அது கல்லைத் தூக்குறது.. நான் அவன் இல்ல..)

Post Comment

34 comments:

ஆகுலன் said...

அடடா எனக்குதான் வடை....

DrPKandaswamyPhD said...

கமென்ட் போடறதென்பது இம்புட்டுத்தானா? இத்தன நாள் தெரியாமெ எண்ட வாழ்நாளே வீணாகிப்போச்சே! இப்ப என்ன செய்யறதுண்டு வெளங்கலியே? சயனைடு குப்பி எங்கிட்டாகிலும் கெடச்சா ஒடனே அனுப்பி வையுங்கோ!

ஆகுலன் said...

விளக்கம் காணாது எண்டு படம் வேற....ம்ம்ம்ம் நல்லா நடத்துங்க பாஸ்.....நீங்க பாத்ரூம்ல நிண்டு யோசிச்ச படியாதான் இப்படி ஒரு பதிவு போடுறியல்...

ஆகுலன் said...

நீங்க ஓட்டு போட சொல்லித்தரும் வரைக்கும் நான் ஓட்டு போடமாட்டன்..ஆ

KANA VARO said...

ஆகுலன் said...
அடடா எனக்குதான் வடை..//

இப்பவாவது எனக்கு வந்து வடை சுட்டீங்களே! அது சரி அடிக்கடி பதிவு போடுறீங்க இல்லை., ஹொலிடே தானே

KANA VARO said...

DrPKandaswamyPhD said...
கமென்ட் போடறதென்பது இம்புட்டுத்தானா? இத்தன நாள் தெரியாமெ எண்ட வாழ்நாளே வீணாகிப்போச்சே! இப்ப என்ன செய்யறதுண்டு வெளங்கலியே? சயனைடு குப்பி எங்கிட்டாகிலும் கெடச்சா ஒடனே அனுப்பி வையுங்கோ!//

அடடே! இப்பவாவது தெரிஞ்சு கொண்டீங்க, சந்தோஷ படுங்க டாக்டர்

KANA VARO said...

ஆகுலன் said...
விளக்கம் காணாது எண்டு படம் வேற....ம்ம்ம்ம் நல்லா நடத்துங்க பாஸ்.....நீங்க பாத்ரூம்ல நிண்டு யோசிச்ச படியாதான் இப்படி ஒரு பதிவு போடுறியல்..//

சமையல் கட்டில இருந்து யோசிச்சா எப்பிடி போட்டிருப்பான் ???

KANA VARO said...

ஆகுலன் said...
நீங்க ஓட்டு போட சொல்லித்தரும் வரைக்கும் நான் ஓட்டு போடமாட்டன்..ஆ//

கண்ணா அப்பிடி செய்துடாதடா! அண்ணா பாவமில்ல!

ஆகுலன் said...

நாளைக்கு பதிவு போடுவன்......

மைந்தன் சிவா said...

கொய்யாலே...
அதென்ன மைந்தனின் ஹன்சிகா??
அவள் என் "முன்னாள்"!!!!!ஓகே?

மைந்தன் சிவா said...

தொழில்நுட்பம் கண்ணைகட்டுது சார்!!பிச்சிட்டீங்க போங்க!

மைந்தன் சிவா said...

தொழில்நுட்பம் கண்ணைகட்டுது சார்!!பிச்சிட்டீங்க போங்க!

தமிழ்வாசி - Prakash said...

ஹா..ஹா... நல்ல பதிவு கண வரோ...

தமிழ்வாசி - Prakash said...

கமென்ட் எப்படி போடறதுன்னு சொல்லித் தந்த நீங்க என்னென்ன கமென்ட் போடலாம்னும் சொல்லித் தந்திருக்கலாம்.

தமிழ்வாசி - Prakash said...

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.////

இப்படி வச்சு நாம போட்ட கமெண்ட்டை உடனே பப்ளிஷ் ஆக விடாம இம்சை பண்ணும் பதிவர்களை என்ன செய்யலாம்? ஒரு வழி சொல்லுங்க

ஆமினா said...

இந்த விஷயம் தான் ரொம்ப நாளைக்கு தெரியாம இருந்துச்சு... இப்ப கத்துகிட்டேன் சகோ

பகிர்வுக்கு நன்றி... :))

அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்... ஏன்னா எப்படி ஓட்டு போடுறதுன்னு கூகுள்ல சர்ச் பண்ணி பார்த்தும் கிடைக்கல :(

Ashwin-WIN said...

ஏலே இதுல இம்புட்டு விஷயம் இருக்கா... இதைவிட ஈசியா ஏதும் வழி இருக்கா பாஸ்????

Mohamed Faaique said...

comment testing 1

Mohamed Faaique said...

comment testing 2

Mohamed Faaique said...

comment testing 3

Mohamed Faaique said...

சொல்லிடீங்கள்ள....
இந்த பதிவ அகசியம் ப்லாக் ஓனர் பார்த்திருப்பாருள்ள.. இனிமே என் பதிவுக்கு பின்னூட்டம் போடாம தப்பிக்க முடியாதுள்ள....

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

பாஸ் பாஸ்
இதுவரை காலமும் இப்புடி ஒரு பதிவை நான் படித்ததே இல்லை
எப்புடி பாஸ் எப்புடி
உங்களால் மட்டும் இப்புடி ஒரு பதிவு போடமுடியுது
பின்னுறீங்க பாஸ்
அவ்வவ்

♔ம.தி.சுதா♔ said...

சகோதரம் கொமண்டு பார்கக எல்லாம் வெயிட் பண்ணக் கூடாத... பொமண்ட தட்டச்சிட்ட பின் கீழ பாருங்க மெயிலுக்கு அனுப்பிறதா எனக் கேட்கும் அதை கொடுத்தால் முழுக்க மெயில் வாசலில் வந்து நிற்குமே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அன்பு அண்ணானுக்காக ஆசையாய் ஒரு மடல்

நிரூபன் said...

ஐயோ...காளியம்மா என்னைக் காப்பாத்து...

என்ன ஒரு கொலை வெறியோடு அலையுறாங்க ஆளுங்க.

செங்கோவி said...

நேற்று நைட்டு தான் ‘கமெண்ட் போடுவது எப்படி’ன்னு ஒரு பதிவை எழுதி முடிச்சேன்..காலைல பார்த்தா நீங்களும் அதே டாபிக்!

ஆனா நான் எழுதுனது உங்க அளவுக்கு சீரியஸ் இல்லை, மக்கா!

! சிவகுமார் ! said...

கந்தசாமியின் தொண்டர் படை உங்களை நோக்கி விரைந்து வந்துகொண்டிருக்கிறது.

கந்தசாமி. said...

///இந்தப் பதிவு, கடைசியா கந்தசாமி அண்ணாச்சி போட்ட தொ.நுட்ப பதிவுக்கு எதிர்ப்பதிவு இல்லை எண்டுறதை மைந்தனின் ஹன்சிகா மேல சத்தியம் பண்ணுறன். /// எனக்கு எதிர்பதிவு போட்டதுக்காக கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்............இருந்தாலும் இது எதிர்ப்பதிவு இல்லை என்று ஹன்சிகா மீது சத்தியம் செய்ததுக்காக மன்னிச்சு கொள்கிறேன் ஹிஹி...

கந்தசாமி. said...

///இதுக்கு என்ன காரணமாக இருக்கலாம் என பாத்ரூமில் இருந்து யோசித்த போது ஒரு விசயத்தை ஊகிக்க முடிந்தது// அண்ணர் பாத்திரூமில் மட்டும் தான் பிரீயா இருக்கார் போல..)

கந்தசாமி. said...

பின்னூட்டம் போடுவது எப்படி என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவை விளக்க படங்களுடன் எழுதிய எங்கள் அண்ணனுக்கு நன்றிகள் பல கோடி ..(இதில உள் குத்து ஒண்ணும் இல்லையே ஹிஹி )

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி...

அம்பாளடியாள் said...

ஏலே இதுல இம்புட்டு விஷயம் இருக்கா... இதைவிட ஈசியா ஏதும் வழி இருக்கா பாஸ்???

சொல்லுங்க சார் நாங்களும் இதேதா கேக்குரோமுங்க...

பயனுள்ள பகிர்வு நன்றி சகோ பகிர்வுக்கு .என் தளத்துக்கு வாங்க சிரிக்கலாம்

கவி அழகன் said...

கண்றாவி

கவி அழகன் said...

போயிடிச்சு மாப்பிள நம்ம கடைப்பக்கம் வருவார்

ஆமினா said...

தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

வாழ்த்துக்கள்